அநுர அரசாங்கம் இல்லையென்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ‘டித்வா’ புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கமுயற்சிப்பதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (11) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் வனிதா செல்லப்பெருமாள், கால் நடை மற்றும் காணி விவசாய அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன், சீனோ நிறுவனத்தின் பணிப்பாளர் அஜித் எதிரிசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட 16 மீனவர் அமைப்புகளுக்கு இதன்போது சுமார் 2 கோடியே 69 இலட்சத்து 70 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடுகள் வழங்கப்பட்டதுடன் 12 மீனவர்களுக்கு புதிய மற்றும் திருத்தப்பட்ட படகுகள், இயந்திரப்படகுகள் அமைச்சரினால் வழங்கிவைக்கப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர்,

கடந்த காலங்களில் சுனாமி அனர்த்தம், வெள்ள அனர்த்தங்களில் மக்களுக்கு நஷ்ட ஈடுவழங்காமல் அன்று அந்த பணங்களை அரசியல்வாதிகள் கொள்ளையிட்டனர். கடந்த காலங்களில் அரசியலுக்கு வந்தவர்கள் பலர் இன்று செல்வந்தர்களாக காணப்படுகின்றனர். அவர்களுக்கு இந்த பணம் எவ்வாறு வந்தது என்று மக்களுக்கு தெரியும்.

நாங்கள் சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே இவ்வாறானவர்கள் எங்களை ஆட்சிசெய்வதை தடுக்கமுடியும். சிறந்த அரசியலை முன்னெடுப்பதன் மூலமே மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கமுடியும். கடந்தகாலத்தில் இடம்பெற்ற கொள்ளைகள் நிறுத்தப்பட்டதன் காரணமாகவே இன்று அந்த பணத்தினைக்கொண்டு மக்களுக்கான அபிவிருத்திகளை முன்கொண்டு செல்லமுடிகின்றது.

வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடிகள் இங்கும் தாக்கத்தினை செலுத்துகின்றது. எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நெருக்கடி இலங்கைக்குமட்டுமான நெருக்கடி அல்ல, உலக நாடுகளுக்கான நெருக்கடி.

இந்த நாட்டில் ஒரு மாதத்திற்கான எரிபொருட்களையே சேமிக்கமுடியும். நாங்கள் தற்போது மூன்று மாதத்திற்கான ஆறு மாதங்களுக்கான எரிபொருட்களை சேகரித்துவைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றோம்.

ஆனால் இன்றைய நிலைமையினை வைத்து அரசியல்வாதிகள் குளம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றனர்.

இந்த நாட்டில் அநுர குமார திசாநாயக்க என்பவர் ஆட்சியதிகாரத்தினை பொறுப்பேற்காவிட்டிருந்தால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நாட்டில் ஒரு மாற்றமான அரசியல்முன்னெடுத்துவரும் நிலையில் உலகளவிலும் ஒரு மாற்றமான அரசியல் சூழ்நிலையேற்பட்டுள்ளது. அதனை சிலர் பயன்படுத்தும் நிலைமைகளை காணமுடிகின்றது.

gajendra

ராஜ்சோமதேவ ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி- ஒருநிகழ்ச்சி நிரலுடன் செயற்படுகின்றார்- நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார்

October 22, 2026

பேராசிரியர் ராஜ்சோமதேவ சுத்தமான சிங்கள பௌத்த தேசியவாதி அவர் ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுகின்றார் என தமிழ்தேசிய மக்கள்

16930815621492431198

பௌத்தமதகுருமார் ஆர்ப்பாட்டத்தில் பதற்றநிலை

October 22, 2026

விகாரமகாதேவி பூங்காவில் பௌத்தமதகுருமார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்மதகுருமாரை அங்கிருந்து அகற்றுவதற்கு நீதிமன்ற

Easter1

உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்த இராணுவபுலனாய்வாளர்- நீதிமன்றில் தகவல்

October 22, 2026

இராணுவபுலனாய்வு பிரிவை சேர்ந்த ஒருவர் உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரே சாராஜஸ்மினை கண்காணித்தார் என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலீப பீரிஸ்

court-judge-hammer-gavel-696x398

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கான வாய்மூல சமர்ப்பணம் நிறைவு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தை’ சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான வாய்மொழி சமர்ப்பணங்கள்

1200-675-27152847-thumbnail-16x9-kanimozhi

“சமூக ஊடகங்களில் பெண்களைத் தொடர்ந்து அவதூறாகப் பேசும் தவெகவினர்!” – கனிமொழி எம்.பி. கடும் கண்டனம்!

October 22, 2026

சென்னை: சட்டரீதியாகவும், காவல்துறையை வைத்தும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் பெண்கள் மீது தவெகவினர் தொடர்ந்து வன்முறையைக் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று

admk-whip-appointment-kp-munusamy-edappadi-palaniswami-meeting-cv-shanmugam-2026-05-16-17-43-38

“தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும்!” – கே.பி.முனுசாமி காட்டம்!

October 22, 2026

தருமபுரி: தமிழக அரசியலில் இருந்து தவெக சீக்கிரம் காணாமல் போய்விடும் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

94106644181cab18a678116c6d8741f5

“பாரா ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற கஸ்தூரி ராஜாமணிக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை!” – முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

October 22, 2026

சென்னை: பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வலுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கஸ்தூரி ராஜாமணிக்கு முதலமைச்சர்

1200-675-24979643-thumbnail-16x9-sengottaiyan

உள்ளாட்சித் தேர்தல் தள்ளிவைப்பு ஏன்? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!

October 22, 2026

தமிழ்நாடு: தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

Sri Lanka's President Ranil Wickremesinghe (L) along with country's former President Gotabaya Rajapaksa attend the annual Buddhist Navam procession at the Gangaramaya Temple in Colombo on February 5, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

பலமான நிலையில் கோட்டாபயவுக்கு எதிரான விசாரணைகள்

October 22, 2026

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் பலமான நிலையில் உள்ளதாக

Amnesty-900x550

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தால் மனித உரிமைகளுக்கு கடும் பாதிப்பு

October 22, 2026

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான

nurai

நாளை முதல் வழமைக்கு நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகள்

October 22, 2026

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகளை நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என தேசிய மின்

thethu

நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு

October 22, 2026

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களுக்கு பலத்த மழை பெய்து வருவதால், அந்த நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகளைத்