எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர், குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அடுத்த மாதம் 18ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பம் இடும் பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ளன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி. பெரேரா, அமைச்சருக்கு எதிராக லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை மற்றும் நிலக்கரி கொள்வனவு செயற்பாடுகளை […]
யாழில் 6 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு!

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தின் வழக்கு தவணைகளின் போது தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் முற்படாத பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த சந்தேக நபர்கள் ஒரு மாதத்திற்குள் நீதிமன்றில் முன்னிலையாகாவிடின் அவர்களது சொத்துக்களை முடக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் சந்தேக நபர்களின் வசிப்பிடங்களிலும் பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பத்திராஜா, யாழ்ப்பாணம் தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு […]
இலங்கைக்கு அவசரமாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தேவை

இலங்கைக்கு அவசரமாக எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் தேவைப்படுவதாக முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பாரிய பிரச்சினைகள் நடைபெற்று வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அந்த விடயங்களை கருத்தில் கொள்ளாது செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் இவ்வளவு பிரச்சினை இடம்பெற்று வரும் நிலையில், சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் நீர்மூழ்கி கப்பல்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திக் கொண்டிருப்பதாக அவர் […]
கொல்லப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்க ஈரான் தயங்காது

மெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானியர்களின் இரத்தத்திற்குப் பழிவாங்க ஈரான் தயங்காது என்று ஈரானின் புதிய அதியுச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார். ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியின் அறிக்கை, அரசு கட்டுப்பாட்டில் உள்ள தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டு வருகின்றது. ஈரானின் அதியுச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தாக்குதலில் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது மகனான மொஜ்தபா கமேனி அதியுச்ச தலைவராக தெரிவுசெய்யப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை. இந்தநிலையில் இன்றையதினம்(12) முதன்முறையாக […]
சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் யாழில் மீட்பு!

யாழ்ப்பாணத்தில் இரண்டு கடைகளில் இருந்து சட்டவிரோத இலத்திரனியல் உபகரணங்கள் மீட்கப்பட்டன. இந்த நடவடிக்கை இன்று(12.03.2026) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், இலத்திரனியல் உபகரணங்களை விற்பனை செய்கின்ற, யாழ்ப்பாணத்தில் உள்ள 4 கடைகளும், ஊரெழு பகுதியில் உள்ள ஒரு கடையிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் அனுமதியின்றி 2 கடைகளில் இலத்திரனியல் உபகரணங்கள் விற்பனைக்காக வைத்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸார் ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் […]
நாட்டில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

அடுத்த மாதம் முதல் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்தியேக பேருந்து சேவையை ஆரம்பிக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையானது ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய 430.7 மில்லியன் ரூபா முதலீட்டில் முதற்கட்டமாக 10 நவீன தாழ்தள (Low-floor) குளிரூட்டப்பட்ட பேருந்துகள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இந்த பேருந்துகள் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் எவ்விதத் தடையுமின்றி ஏறி இறங்கும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேருந்திலும் 33 ஆசனங்கள் […]
மேல்நீதிமன்ற நீதிபதியை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை?
தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜெயலக்ஷி டி. சில்வாவை விடுவிக்குமாறு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. B/940/22 வழக்கு தொடர்பாக, பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேகநபருக்கு தண்டனைச் சட்டக்கோவையின் 486 மற்றும் 344 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியபோது, பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், சட்டமா அதிபர் ஆலோசனையின் […]
அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி ஒருவர் பலி
பிலியந்தலை, கொரகபிட்டிய பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் அச்சகம் ஒன்றில் பணியாற்றி வந்த இயந்திர இயக்குநர் ஒருவர், அங்குள்ள அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி உயிரிழந்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெனியாய, பல்லேகம, நிஸ்ஸங்க வீதியைச் சேர்ந்த மிலிந்த மதுசங்க விஜேசிங்க (27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வேறு ஒருவருடன் இணைந்து அச்சு இயந்திரம் ஒன்றில் அன்றாடப் பணியில் ஈடுபட்டு வந்த போது அங்கிருந்த மற்றைய நபர், இயந்திரத்தில் திடீரென ஏற்பட்ட கோளாறை பரிசோதிப்பது […]
மண்கும்பானில் பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் உட்பட ஐவர் விபத்தில் படுகாயம்

யாழ்ப்பாணம், மண்கும்பான் பகுதியில் கார் மற்றும் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில், இலங்கைக்குச் சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டுப் பிரஜைகள் இருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இலங்கைக்குச் சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 67 மற்றும் 70 வயதுடைய இருவர், வாடகை கார் ஒன்றில் மண்கும்பான் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது, குறித்த கார் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணித்த பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர், […]
பாடசாலையில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி மாணவன் பலி

கண்டி, மஹியாவ பகுதியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் பணிப்பாளர் சபை உறுப்பினர் ஒருவரின் வாகனத்தில் சிக்கி, அதே பாடசாலையில் கல்வி பயிலும் 7 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று (12) காலை 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரவிக்கப்படுகிறது. குறித்த பணிப்பாளர் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கிச் சென்றதன் பின்னர், வாகனத்தின் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாகனம் திடீரென நகரத் தொடங்கியுள்ளது. இதன்போது பாடசாலையில் நீர் அருந்திக் கொண்டிருந்த இரண்டு […]