இம்மாத இறுதியில் மின் கட்டண அதிகரிப்பு?

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முடிவு இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கு 13.56% மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்கு அனுமதி கோரி, இலங்கை மின்சார சபை அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்திருந்தது. இது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் மூன்றாம் நாளாக இன்று மாத்தளை மாவட்டத்தில் பொதுமக்களிடம் கருத்துக்கள் […]

இந்தியாவிடம் இருந்து எரிபொருள் கோரிக்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேருந்து மிதி பலகையில் பயணித்தவர் கீழே விழுந்து பலி

பேருவளை, மஸ்ஸல பிரதேசத்தில் நேற்று (11) அதிகாலை வேளையில் பேருந்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தில் ஏறிய இந்த பயணி, பாதுகாப்பற்ற முறையில் அதன் மிதி பலகையில் நின்றுகொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார். குறித்த நபர் பேருந்தின் பின்பக்க கதவு வழியாக ஏறி மிதி பலகையிலேயே நின்றுகொண்டிருந்துள்ளார். இதன்போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு, […]

மத்திய கிழக்கு யுத்த நிலைமை இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – மகிந்த ராஜபக்ஷ

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன? பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா? கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. […]

ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழலுக்கு மத்தியில் ஒரே இரவில் மேலும் மூன்று சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகளுக்கான மையம் (UKMTO) தெரிவித்துள்ளது. போர் ஆரம்பமான பெப்ரவரி 28 ஆம் திகதி முதல், வளைகுடா, ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமான் வளைகுடா ஆகிய பகுதிகளில் இதுவரை 16 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோதலின் போது, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை குறித்து நான்கு அறிக்கைகள் வந்துள்ளன என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. […]

பாடசாலை சேவைக்கு மேலும் 200 பேருந்துகள்

சிசு செரிய பாடசாலை பேருந்து சேவையை மேலும் முறைப்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டில் 200 க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகளை புதிதாக இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இசுருபாய வளாகத்தில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனவிரத்ன மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதனை உறுதிப்படுத்தினர். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு ஆகியவை இணைந்து இந்த ‘சிசு செரிய’ பேருந்து சேவையை […]

ஜனாதிபதி – இலங்கை மின்சார சபை தொழிற் சங்கங்கள் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (12) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறை குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நுகர்வோருக்கு நியாயமான விலையில், வினைத்திறனான மற்றும் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துவதும், புதிய நிறுவனங்களின் உரிமையை அரசாங்கத்தின் கீழ் பேணுவதன் மூலம் ஒரு நாடாக வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுமே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கை […]

மீட்கப்பட்ட படகில் 10 பில்லியன் பெறுமதியான போதைப்பொருள்!

இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருள் தொகையின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட, போதைப்பொருள் மற்றும் நவீன ஆயுதங்கள் கடத்தப்பட்ட இரண்டு பலநாள் மீன்பிடி படகுகள் இன்று (12) திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன. கடற்படையின் நீண்டதூர தேடுதல் கப்பல்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட நடவடிக்கையின் போது, […]

கனடா – ஹமில்டன் பகுதியில் ‘பியர் ஸ்ப்ரே’ பாவித்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மேற்கொள்ளும் குற்றங்கள் அதிகரிக்கின்றன?

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தொடர்புடைய பியர் ஸ்ப்ரே (Bear Spray) சம்பவங்கள் — குறிப்பாக தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் — அதிகரித்து வருவதாக ஹமில்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் இளைஞர்கள் இந்தச் சம்பவங்களைச் செய்பவர்களாகவும், சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். இளைஞர்கள் முதலில் பியர் ஸ்ப்ரேவை எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை கண்டறிய விசாரணை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், காவல்துறையினர் கூட்டங்களை ஏற்பாடு செய்து அதன் தீவிர விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி […]

ஒரே நாளில் 937 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று புதன்கிழமை (11) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 937 பேர் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 909 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 06 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது […]