கனேடிய பிரதமர் மார்க் கார்னி நேட்டோ போர் பயிற்சிக்கு விஜயம்!

கனடாவின் பிரதமர் மார்க் கார்னி இன்று வியாழக்கிழமை கூட்டணி நாடுகளின் தலைவர்களைச் சந்திப்பதற்காக நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். நோர்வேயில் இருக்கும் போது, இந்த வார இறுதியில் அவர் ஆர்க்டிக் வட்டத்திற்கு அப்பால் வடக்கு பகுதிக்கு சென்று, நேட்டோ அமைப்பின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய “கோல்ட் ரெஸ்பான்ஸ்” (Cold Response) இராணுவப் பயிற்சியை நேரில் பார்வையிட உள்ளார். அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மத்திய கிழக்கு போர் உள்ளிட்ட அதிகரித்துள்ள […]
இராணுவ வீரர் வீட்டில் வெடிபொருட்கள்,சீருடைகள்?

பொலன்னறுவை மாநில புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, ஹிங்குராக்கொட பகுதியிலுள்ள ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ஹட்டன் – டயகம பிரதான வீதியில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று, சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போடைஸ் (Fordyce) N.C பிரிவு பகுதியில் வியாழக்கிழமை (12) காலை 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி சென்ற முச்சக்கர வண்டியே, வீதியை விட்டு விலகி அருகிலிருந்த தேயிலை மலைப்பகுதியினுள் சுமார் 75 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தின் போது முச்சக்கர […]
மல்லாவியில் பாம்பு தீண்டி வருமானப் பரிசோதகர் மரணம்

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (11) மாலை உயிரிழந்துள்ளார். துணுக்காய் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். ஒரு பிள்ளையின் தந்தையான இவர், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது வயல் நிலத்தைப் பார்வையிடச் சென்ற போதே, இவரைப் பாம்பு தீண்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி […]
தூதுவர்களின் நியமனங்களுக்கு அங்கீகாரம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட 10 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் நியமனங்களுக்கு, ‘உயர் பதவிகள் பற்றிய பாராளுமன்றக் குழு’ அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைகள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களுக்கு நியமிக்கப்படும் நபர்களின் தகைமைகளை ஆராயும் இக்குழுவின் அனுமதியைத் தொடர்ந்து, குறித்த இராஜதந்திரிகள் தத்தமது பணிகளைப் பொறுப்பேற்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள இராஜதந்திரிகளின் விபரங்கள்: தர்ஷன எம். பெரேரா – மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர். டி.எம்.எஸ்.பி. தசநாயக்க – […]
தங்கத்தை திருட குழந்தையின் சடலத்தைத் தோண்டிய அவலம்
தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்வதாகக் கூறி மயானத்திற்குள் நுழைந்து, புதைக்கப்பட்டிருந்த மூன்று மாதக் குழந்தையின் சடலத்தைத் தோண்டி, அதிலிருந்த தங்க நகைகளைத் திருட முயன்ற நபரைத் தேடி ஹோமாகம தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: ஹோமாகம, நியதகல பொது மயானத்திற்கு புதன்கிழமை (11) மாலை வந்த சந்தேக நபர் அங்கிருந்த மின்மயானக் காப்பாளரைச் சந்தித்துள்ளார். தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்யப் போவதாகக் கூறி மயானத்திற்குள் செல்ல அனுமதி பெற்றுள்ளார். […]
திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு போதைப்பொருட்கள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகள் கொண்டுவரப்பட்டன!

நாட்டின் தெற்கு கடற்பரப்பில், போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட 2 மீன்பிடிப் படகுகளும் திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த படகுகளில் சுமார் 600க்கும் அதிகமான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் காணப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி, ரி56 ரக துப்பாக்கிகள் 2, பிஸ்டல் ரக கைத்துப்பாக்கிகள் 8 மற்றும் M16-2 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டை சுற்றியுள்ள தெற்கு ஆழ்கடல் பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட கடல்சார் நடவடிக்கையின்போதே இவை கைப்பற்றப்பட்டதாக […]
கனடாவில் கொவிட் – 19 நினைவு நாளையொட்டி அரைக்கம்பத்தில் கொடிகள்!

கனடாவில் கொவிட் – 19 நினைவு நாள் வருடாந்தம் மார்ச் 11 ஆம்திகதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. பிராம்டன் நகர மன்றத்தில் உள்ள கொடிகள் COVID-19 நினைவு தேசியக் கண்காணிப்பு நாளை முன்னிட்டு அரைநிலைக்கு தாழ்த்தப்பட்டிருந்தன. மேலும் நகர மன்றத்தின் கடிகார கோபுரத்தின் விளக்குகளும் மங்கச் செய்யப்பட்டன என்பது குறிப்பித்தக்கது. இந்த ஆண்டு, COVID-19 உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைவதை குறிக்கிறது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரையும் — குறிப்பாக அன்புக்குரியவர்களை இழந்தவர்களையும், நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், […]
‘ஹேப்பி ராஜ் ‘படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ . வி. பிரகாஷ் குமார் நடிப்பில் தயாராகி வரும் ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘துரு துரு’ எனும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார், அப்பாஸ், ஸ்ரீ கௌரி பிரியா , ஜோர்ஜ் மரியன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த […]
பரத் – அஜய் கார்த்தி இணையும் ‘காளிதாஸ் 2 ‘

அறிமுக நடிகர் அஜய் கார்த்தி மற்றும் பிரபல நடிகர் பரத் முதன்முறையாக இணைந்து கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதாஸ் 2 ‘ திரைப்படத்தில் அஜய் கார்த்தி, பரத் , ‘பூவே உனக்காக’ புகழ் சங்கீதா , பவானி ஸ்ரீ , அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் […]