செம்மலர் அன்னம் இயக்கத்தில் ‘மயிலா’

மண் மணம் சார்ந்த படைப்புகளில் தோன்றி திறமையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் நடிகை செம்மலர் அன்னம் கதையை வழிநடத்திச் செல்லும் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மயிலா’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மயிலா’ திரைப்படத்தில் குடும்பங்களையும் , சமூகங்களையும் அமைதியாக வடிவமைக்கும் அழுத்தமான பெண்மணி கதாபாத்திரத்தில் இயக்குநர் செம்மலர் அன்னம் நடித்திருக்கிறார். இதனை நியூட்டன் சினிமா நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆண்டோ தயாரித்திருக்கிறார். இத்திரைப்படத்தை இயக்குநர் […]
மாயாஜால கதையாக உருவான ‘மரகத மலை’

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சந்தோஷ் பிரதாப் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மரகத மலை’ திரைப்படம்- ராஜா ராணி காலத்தை சார்ந்த மாயாஜால கதையாக அனைத்து தரப்பினரையும் மகிழ்விக்கும் படைப்பாக உருவாகி உள்ளது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அறிமுக இயக்குநர் லதா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘மரகத மலை’ திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப் , தீப்ஷிகா , தம்பி ராமையா, ஜெகன், தீரஜ் ஆகியோருடன் குழந்தை நட்சத்திரங்களான சஷாந்த் -அரிமா வர்மன் -கலைக்கோ வர்மன் -மஹித்ரா […]
குடும்பத் தகராறு; மாமியாரை வெட்டிப் படுகொலை செய்த அரச உத்தியோகத்தர்!
யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11) இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து, மனைவியை தாக்கியுள்ளார். அவ்வேளை மனைவியை கத்தியால் குத்த […]
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் பலத்த மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. அதன்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும் போது மரங்களுக்கு அடியில் நிற்காமல், […]
சஹ்ரானே ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் என்பதையும், இது ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) கொள்கையினால் வழிநடத்தப்பட்ட ஒரு செயல் என்பதையும் அமெரிக்காவின் எப்.பி.ஐ (FBI) விசாரணைகள் மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார். பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்று (12) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் உள்ள சிலர் தற்போது முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட […]
நூறாவது வயதில் தடம் பதிக்கும் மூதாட்டிக்கு கௌரவம்

99 வயதை பூர்த்தி செய்து நூறாவது வயதில் தடம் பதிக்கும் மூதாட்டி ஒருவரை கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக, ‘சேர்க்கிள்’ (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டம், கோறளைப்பற்று வாழைச்சேனை மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை, பசீர் வீதியில் வசித்து வரும் கலந்தர்லெப்பை சாலிஹா உம்மா என்பவரின் இல்லத்திற்கே அதிகாரிகள் நேரில் சென்று இந்தக் கௌரவிப்பை வழங்கினர். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ‘சேர்க்கிள்’ இளம் பெண்கள் […]
பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் நிறுவனத்தில் திடீர் தீ விபத்து

கம்பஹா – சபுகஸ்கந்த, சியம்பலாபே தெற்கு பகுதியில் அமைந்துள்ள பழைய பிளாஸ்டிக் பொருட்களை தரம் பிரிக்கும் நிறுவனம் ஒன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று புதன்கிழமை (11) மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சபுகஸ்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த சம்பவத்தில் உயிர்ச் சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக […]
முக்கியமான சட்டமூலங்கள் இரண்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை (6) சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலங்கள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருந்தன. நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஔடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றின் ஊடாக ஆழ்கடலில் அபாயகரமான ஔடத கடத்தல்கள் மற்றும் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு புதிய ஏற்பாடுகளை […]
சட்டவிரோத மதுபான தயாரிப்பு: இருவர் கைது!
நாட்டின் இருவேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று புதன்கிழமை (11) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 67 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர் சிலாபம் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, கம்பஹா பகுதியில், சட்டவிரோத மதுபானத்துடன் […]
ஒன்டாரியோ அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கக்கு புதிய திட்டம்

ஒன்டாரியோ அரசு, ஆரம்பப்பள்ளி வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு கல்வியாண்டிலும் வகுப்பறை உபகரணங்களை வாங்குவதற்காக நேரடியாக $750 நிதியை வழங்கும் வகுப்பறை பொருட்கள் நிதிதிட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. 2026 மாகாண பட்ஜெட்டின் ஒரு பகுதியாக தொடங்கப்படவுள்ள இந்த புதிய திட்டம், ஆசிரியர்கள் தங்கள் சொந்த பணத்தில் முன்கூட்டியே செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் வகுப்பறைக்கு தேவையான பொருட்களை பெற உதவும். இது மாணவர்கள் வெற்றி பெறவும், அவர்களின் முழுத் திறனை அடையவும் மாகாண கல்வி அமைப்பு தொடர்ந்து ஆதரவு வழங்குவதை […]