ரஷ்யாவின் தீர்மானம் தோல்வி

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய போர் சூழல் தொடர்பாக ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட தீர்மானம், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றப்படாமல் தோல்வியடைந்துள்ளது. இதேவேளை, வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்டு வரும் தாக்குதல்களைக் கண்டித்து ஐநா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 13 வாக்குகள் கிடைத்துள்ளன. சுமார் 135 நாடுகளின் இணை அனுசரணையுடன் இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. எனினும், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்ந்து கொண்டுள்ளன. ஜோர்தான் உள்ளிட்ட […]

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது. புதன்கிழமை வர்த்தக முடிவில், சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை 8.7% அதிகரித்து, ஒரு பேரல் 100 டொலர் என்ற எல்லையைத் தொட்டுள்ளது. அதேபோல், அமெரிக்காவின் WTI மசகு எண்ணெய் விலையும் 8.7% உயர்ந்து, பீப்பாய் ஒன்று 94.8 டொலராக பதிவாகியுள்ளது. […]

எலி காய்ச்சலால்: 1,800 பேர் பாதிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா இதனை தெரிவித்தார். “இலங்கையில் இரண்டாவதாக அதிகளவில் பதிவாகும் தொற்றுநோய் எலி காய்ச்சல் ஆகும். ஆண்டுதோறும் சுமார் 13,000 நோயாளர்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றனர். இது இதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக 100 முதல் 200 […]

நிபந்தனைகளுடன் போரை முடிக்க தயார் – ஈரான்

போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக உறுதியான சர்வதேச உத்தரவாதங்களை அளித்தல் ஆகியவையே அந்த நிபந்தனைகளாகும். இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே அமைதி சாத்தியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திரு சுஜிந்தன் திருநாவுக்கரசு

ஜேர்மனி Aalen ஐப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுஜிந்தன் திருநாவுக்கரசு அவர்கள் 10-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகள், அராலி மத்தியைச் சேர்ந்த காலஞ்சென்ற நமசிவாயம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சதீஸ்கரன் அவர்களின் அன்புச் சகோதரரும், றேகா அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார். பார்வைக்கு Saturday, 14 Mar 2026 5:00 PM […]

நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

ஹட்டன் வனப்பகுதிக்குச் சொந்தமான நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் கம்பி பொறியைப் பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் அவை வெட்டிக் கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் நேற்று  இரவு ஹட்டன் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் கைது செய்தனர். குறித்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் மற்றும் மரைகள் உள்ளது, இதனால் தொடர்ந்து இவ் இரண்டு சந்தேக நபர்களும் சுற்றித் திரியும் மரைகளை வேட்டையாட கம்பி வலைகளை பயன்படுத்தி […]

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ மிகப்பெரிய வெற்றி

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 11 நாட்களில் அமெரிக்க இராணுவம் ஈரானை கிட்டத்தட்ட அழித்துவிட்டது என்றும், குறிப்பாக அந்நாட்டின் விமானப்படை முற்றாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானிடம் தற்போது போரிடுவதற்கு எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ள டிரம்ப், அந்நாட்டின் 90% ஏவுகணைகள் மற்றும் 86% ட்ரோன்கள் அமெரிக்காவினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகத் புள்ளிவிபரங்களுடன் தெரிவித்துள்ளார். […]

 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் : 2 இந்தியர்கள் பலி?

ஹார்மூஸ் நீரிணையில் தாய்லாந்து, பிரிட்டிஷ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் 2 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. 10 நாட்களுக்கு மேலாக இந்த போர் நீடித்து வருவதால், அதன் பாதிப்பு பல்வேறு நாடுகளிலும் வெளிப்படையாக தெரிய தொடங்கி இருக்கிறது. இந்த போர் […]

போர் காரண​மாக விமான கட்டணம் அதிகரிப்பு?

ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரண​மாக, விமான எரிபொருள் விலை அதி​கரித்​துள்​ள​தால், ஏர் இந்​தியா நிறு​வனம் விமானக் கட்​ட​ணங்​களை உயர்த்​தி​யுள்​ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வரு​கிறது. இது தொடர்​பாக ஏர் இந்​தியா விமான நிறு​வனம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: உள்​நாடு மற்​றும் சர்​வ​தேச விமானங்​களின் பயணி​கள் கட்​ட​ணம் 3 கட்​ட​மாக அதி​கரிக்​கப்​படு​கிறது. அதன்​படி, முதல் கட்​ட​மாக இன்று அதி​காலை முதல் உள்​நாடு மற்​றும் சார்க் நாடு​களான இலங்​கை, பங்களாதேஷ், பாகிஸ்​தான், ஆப்​கானிஸ்​தான், […]

பாடசாலையில் நடத்தப்பட்ட தாக்குதல் இலக்குத் தவறு – இராணுவ விசாரணை

ஈரானின் மினாப் பகுதியில் உள்ள பாடசாலையில் நடந்த தாக்குதலுக்கு அமெரிக்கா பொறுப்பேற்க வேண்டும், இதில் 175 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் குழந்தைகள் என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது . பெப்ரவரி 28 அன்று ஷாஜாரா தய்யீபே பாடசாலை கட்டடத்தின் மீது டோமாஹாக் ஏவுகணைத் தாக்குதல் அமெரிக்க இராணுவத்தின் இலக்குத் தவறு காரணமாக நடந்தது என்று நடந்து வரும் இராணுவ விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், டோமாஹாக் ஏவுகணைகளைப் பயன்படுத்தும் போரில் ஈடுபட்டுள்ள ஒரே நாடு அமெரிக்கா […]