இந்தியா எப்போதும் தனது குடிமக்களை தவிக்க விடுவதில்லை

இந்தியா எப்போதும் தனது குடிமக்களை வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க விடுவதில்லை. மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடிக்கு மத்தியில் அங்குள்ள இந்தியர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதை உறுதிசெய்கிறோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். கேரள மாநிலம் கொச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, போர் குறித்த நிலைமையை அரசாங்கம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேற்கு ஆசியா முழுவதும் வாழும் மற்றும் பணிபுரியும் இந்தியர்களுக்கு உதவுவதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒருங்கிணைத்து வருகிறோம். தற்போதைய பதற்றங்களின்போது […]

அமெரிக்க தூதுவராக பீட்டர் மண்டல்சன் நியமனம்

அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவராக பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson) நியமிக்கப்பட்டது தொடர்பான முதல் கட்ட அதிகார பூர்வ ஆவணங்களை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த நியமனம் குறித்து அரசியல் வட்டாரங்களில் நிலவிய பல்வேறு விவாதங்களுக்கு மத்தியில், வெளிப்படைத்தன்மையைப் பேணும் நோக்கில் இந்தத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களில் மண்டல்சனின் நியமனம் குறித்த அமைச்சரவை முடிவுகள், லண்டன் மற்றும் வொஷிங்டன் இடையிலான ஆரம்பகட்ட தூதரகத் தொடர்புகள் மற்றும் இந்த உயர் பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான முக்கிய காரணங்கள் […]

கால்பந்தாட்ட தொடரில் ஈரான் பங்கேற்க வாய்ப்பில்லை

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்த நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹ்மத் துன்யமாலி தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்று அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கான பொருத்தமான சூழல் எந்தவொரு நிலையிலும் எம்மிடம் இல்லை. எமது வீரர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே, போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நிலவவில்லை. […]

கறுப்பு மழையால் சுவாசப் பிரச்சினைகள்

ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எண்ணெய் சேகரிப்பு மையமுமு் தாக்கப்பட்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால், தலைநகரை கறுப்புப் புகை மூடியது. இதையடுத்து பெய்த மழை, கருப்பு நிறுத்தில் இருந்துள்ளது. […]

டுபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில், ஒரு இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய […]

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள்; புதிய அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவைகள் தொடர்பான புதிய அறிவிப்பை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று (12) மற்றும் நாளை (13) கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையிலான சில வானூர்தி சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கொழும்பிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்கும் UL231 மற்றும் டுபாயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் UL232 ஆகிய விமான சேவைகளே இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களினால் பாதிக்கப்படும் பயணிகள், தங்களது விமான பயண நிலை குறித்த […]

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (11) மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் […]

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்

அநுர அரசாங்கம் இல்லையென்றால் ‘டித்வா’ புயல் மற்றும் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளினால் என்ன நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பது மக்களுக்கு தெரியும்.அரசியல்வாதிகள் இன்று குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்கமுயற்சிப்பதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ‘டித்வா’ புயலினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நஷ்ட ஈடு மற்றும் புதிய படகுகள் வழங்கும் நிகழ்வு நேற்று (11) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு […]

இலங்கையில் அயோரா தினம்!

இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கமான (IORA) தினம் மார்ச் 11 ஆம் தேதி இலங்கையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, கடல் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான IORA சிறப்பு மையத்தின் உத்தியோகபூர்வ தொடக்க நிகழ்வும் நடைபெற்றது. Ministry of Foreign Affairs Sri Lanka மற்றும் Ocean University of Sri Lanka ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதியமைச்சர் அருண் யேமச்சந்திர […]

அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் – சமிந்த விஜேசிறி

குறைந்த விலைக்கு கொண்டுவந்த எரிபொருளை அதிக விலைக்கு விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அரசாங்கத்துக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டும். ஒரு மாதத்துக்கு தேவையான எரிவாயு இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையியிலே தற்போது எரிவாயு விலையை அதிகரித்து மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (11) நடத்திய செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகாெண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், […]