வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்துக்கு அங்கீகாரம்!

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இச்சட்டமூலம் ஆராயப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

வெளிநாட்டு பயங்கரவாதிப் போராளிகளால் எதிர்நோக்கப்படும் அச்சுறுத்தலைத் தடுத்தல் மற்றும் ஒடுக்குதல் தொடர்பான 2014ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவைத் தீர்மானம் 2178 இற்கு பயன்கொடுப்பதற்கும், அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலமாக இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இச்சட்டமூலத்தை வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி முதலாவது மதிப்பீட்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

இலங்கை பிரஜையொருவர் அல்லது இலங்கை பிரஜை அல்லாத வேறொரு நாட்டின் பிரஜை ஒருவர் இலங்கையில் சமுகமாயிருக்கையில், அல்லது இலங்கைக்கு வெளியே தவறிழைத்திருந்து அது அந்நாட்டின் சட்டத்தின் கீழ் தவறொன்றாக இருப்பின் இச்சட்டத்தின் கீழ் இலங்கையில் நடவடிக்கை எடுக்க முடியும்.

பயங்கரவாத செயல்களை மேற்கொள்ளல், திட்டமிடுதல், தயார்செய்தல் அல்லது அதில் பங்குபற்றுதல், பயங்கரவாத பயிற்சிகளை வழங்குதல் அல்லது பெறுதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தவறுகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் குழுவில் விளக்கமளித்தனர்.

புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை இன ரீதியாக இலக்குவைத்து கொண்டுவரப்படும் சட்ட ஏற்பாடு இல்லையென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

விரிவான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து குறித்த சட்டமூலத்திற்கு குழு அங்கீகாரம் வழங்கியது. குழுவின் உறுப்பினரான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இச்சட்டமூலத்திற்கு தனது எதிர்ப்பினைப் பதிவுசெய்தார்.

இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரங்க ரத்னாயக்க, திலின சமரக்கோன், விஜேசிறி பஸ்நாயக்க, சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோரும், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம், சட்டவரைஞர் திணைக்களம் ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

8

“மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததா?!” – டி.கே.சிவக்குமார் பேச்சுக்கு வைகோ கண்டனம்!

November 14, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதாகக் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடர்ந்து கூறி

45

வெளிநாட்டுப் பயங்கரவாதி போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்துக்கு அங்கீகாரம்!

November 14, 2026

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு பொருளாதார அபிவிருத்தி மற்றும் சர்வதேச உறவுகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அங்கீகாரம்

DEMNBJ3YVJAMFA4CWRQP7ON734

மிசிசாகா வீடொன்றிற்குள் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழப்பு

November 14, 2026

மிசிசாகாவில் (Mississauga) உள்ள வீடொன்றிற்குள் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள

6

இங்கிலாந்து முழுவதும் சுமார் 70 சிறுமிகள் இணையவழியில் பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 30 ஆண்டுகள் சிறை!

November 14, 2026

இங்கிலாந்து முழுவதும் உள்ள குறைந்தது 70 சிறுமிகளை இணையவழியில் ஏமாற்றி, அவர்களது பாலியல் ரீதியான படங்கள் மற்றும் காணொளிகளைப் பெற்ற

64BACECQSBGQJIJLIMRLB5ULJY

எட்டு வயதுச் சிறுமி வாகனத்தால் மோதப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சமிக்ஞை விளக்கு கோரும் நோர்த் யோர்க் குடியிருப்பாளர்கள்

November 14, 2026

கடந்த மாதம் நோர்த் யோர்க் (North York) சந்திப்பு ஒன்றில் எட்டு வயதுச் சிறுமி ஒருவர் வாகன விபத்தில் சிக்கிப்

WTMAD3EFVFDD7EFCGGIG7EEJQU

டொரொன்டோவின் மாற்றுத்திறனாளிகளுக்கான டாக்சிகள் அருகி வருகின்றன; சக்கர நாற்காலிப் பயனர்கள் கடும் பாதிப்பை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்

November 14, 2026

நம்பகமான, சக்கர நாற்காலிப் பயன்பாட்டிற்கு ஏற்ற போக்குவரத்து வசதிகளைப் பெறுவதில் தாம் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்வதாக டொரொன்டோவில் வசிக்கும்

7

“மேகதாது விவகாரத்தில் காங்கிரசுடன் கூட்டணி ஏன்?!” – முதலமைச்சர் விஜய்க்குச் சீமான் சரமாரி கேள்வி!

November 14, 2026

சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என அடாவடியாகக் கூறி வரும் காங்கிரஸ் கட்சியுடன் ஆளுங்கட்சியான தவெக

6

“மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது!” – அமைச்சர் நிர்மல் குமார் திட்டவட்ட கோரிக்கை!

November 14, 2026

மதுரை: மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதி அளிக்கக் கூடாது

5

“விசிக மீது திமுக வன்மத்துடன் நடந்து கொள்கிறது!” – அமைச்சர் வன்னி அரசு பகிரங்கக் குற்றச்சாட்டு!

November 14, 2026

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது பிரதான எதிர்க்கட்சியான திமுக மிகவும் வன்மத்தோடு நடந்து கொள்வதாக மாநிலச் சமூக நீதித்துறை

4

“விலையில்லா சைக்கிள் கொள்முதலில் ரூ.115 கோடி மெகா ஊழல்!” – முதலமைச்சர் விஜய்க்கு அப்பாவு சவால்!

November 14, 2026

சென்னை: குழந்தைகள் தின விழாவில் வழங்கப்பட்ட கேக்கில் முதலமைச்சர் விஜய்யின் படம் இடம்பெற்றதையும், விலையில்லா சைக்கிள் கொள்முதல் திட்டத்தில் நடைபெற்றுள்ள

3

“திமுக ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சரியாக இருந்ததா?!” – எதிர்க்கட்சிகளுக்கு அமைச்சர் ஷாஜகான் கேள்வி!

November 14, 2026

மணப்பாறை: கடந்த திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஏதோ சரியாகப் பராமரிக்கப்பட்டது போல எதிர்க்கட்சிகள் பேசுவது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி

2

“மேகதாது அணை விவகாரம்!” – முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் கடிதம்!

November 14, 2026

சென்னை: மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேசியுள்ள நிலையில்,