ஆசிரியர் மீது மாணவன் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பார்ட்டம்

திருகோணமலை, அபயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸாரும் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், சக ஆசிரியர் மீதான இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தும், பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறு கோரியும், குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
’தேஹிபாலே மல்லி’ ஜோர்ஜியாவில் கைது

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் தென்பகுதியின் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான படபெந்தி மத்துமகே ஷெஹான் சத்சர எனப்படும் ‘தேஹிபாலே மல்லி’ உள்ளிட்ட நால்வர் ஜோர்ஜிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் நால்வரும் இரண்டு நாள்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட ஏனைய மூவரும் அவருடன் தொடர்புடைய சகாக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டுபாயிலிருந்து ஜோர்ஜியா ஊடாக ஐரோப்பிய நாடொன்றுக்குச் சட்டவிரோதமாகத் தப்பிச் […]
திருவள்ளுவர் சிலை தென் கொரியாவில் திறப்பு

கொரியத் தமிழ்ச் சங்கம், கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய ‘முதலாம் பன்னாட்டு இந்திய – தமிழ் – கொரிய ஆய்வு மாநாடு 2026’, கொரியத் தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா மற்றும் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் 205-ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழாக்கள், தென் கொரியாவின் டேஜான் (Daejeon) நகருக்கு அருகிலுள்ள […]
ஏமாற்றப்பட்ட 40 இலங்கையர்களுக்கு உதவி?

சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த 40 இலங்கைப் பணியாளர்களுக்கு, அவர்களுக்குரிய நிலுவைச் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் 569 இலட்சம் ரூபாய் நேற்று(13) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து வழங்கப்பட்டது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் தேவப்பிரிய குணசிங்க தலைமையில் இந்த நிதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்தப் பணியாளர்களுக்கு உரிய காலத்தில் வழங்கப்படாமல் இருந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக 639,381 சவூதி ரியால்கள் (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 569 […]
லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு லாஃப்ஸ் (LAUGFS) எரிவாயு நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1,775 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,965 ரூபாவாக இருந்த குறித்த சிலிண்டரின் புதிய விலை 6,740 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 732 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி 1,988 ரூபாவாக இருந்த அதன் புதிய விலை 2,720 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக […]
நாமலின் கிரிஷ் விசாரணை; இரசாயனப் பகுப்பாய்வாளரின் அறிக்கை கோரல்

கிரிஷ் (Krrish) கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை, எதிர்வரும் நவம்பர் மாதம் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்குக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, இவ்வழக்குத் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தபோதிலும் (வேறு வழக்குகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள) சந்தேகநபரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ […]