திருகோணமலை, அபயபுர பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், பாடசாலை நேரத்தின்போது ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, மாணவன் ஒருவனால் ஆசிரியர் தாக்கப்பட்டுள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த ஆசிரியர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து திருகோணமலை பொலிஸாரும் கல்வித் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சக ஆசிரியர் மீதான இத்தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டித்தும், பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பாதுகாப்பை உடனடியாக உறுதிப்படுத்துமாறு கோரியும், குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.