சென்னை:
வெளிச்சந்தையில் ஒரு யூனிட் 35 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதில் ஊழல், முறைகேடு நடப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மின்சார தட்டுப்பாடு:
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தலைமைச் செயலகம் உட்பட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்காமல், வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின்சாரத்தைத் தவெக அரசு வாங்குகிறது,” என்றார்.
அமைச்சர் நிர்மல்குமாருக்கு கேள்வி:
மேலும், “ஒரு யூனிட் ரூ.20-க்கு வாங்கியதை விமர்சித்த தற்போதைய அமைச்சர் நிர்மல்குமார், இப்போது ரூ.35-க்கு வாங்குவது எப்படி? ஹார்ட் டிஸ்க் காணாமல் போன விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மின்தடைக்கு திமுகவைக் குறை சொல்லும் நோக்கில் அமைச்சர் செயல்படுகிறார்,” எனச் செந்தில் பாலாஜி சரமாரியாகக் கேள்வியெழுப்பினார்.
#SenthilBalaji #ElectricityScam #CTRNirmalKumar #DMK #TNPolitics #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive