உடவளவை – தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை உடவளவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.