தமிழ் மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை – ரவிகரன் எம்.பி

தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அத்தோடு தமிழர் தாயகத்தில் ஆக்கிரமிப்புச் செயற்படுகளில் ஈடுபடும் மகாவலி அதிகாரசபை போன்ற திணைக்களங்களினாலேயே தேசியமக்கள் சக்தியின் ஆட்சி வீழ்ச்சியடையுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா திட்டம் […]
அனுமதியின்றி வீடியோ எடுத்த இலங்கையர் கனடாவில் கைது

அனுமதியின்றி நபர்களைத் துன்புறுத்தி வீடியோ காட்சிகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரொறொன்றோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளதற்கமைய, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி சந்தேகநபர் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 45 வயதான சந்தேகநபர் மீது ரொறொன்றோ பொலிஸாரால் நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கனடாவின் குற்றவியல் சட்டக் கோவையின் கீழ், குற்றவியல் துன்புறுத்தல் தொடர்பாக குற்றப்பத்திரிகை […]
இ.போ.ச நடத்துனரை போதையில் தாக்கிய இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த குறித்த பேருந்தில், இளைஞன் ஒருவர் மதுபோதையில் பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு ஆபத்தான முறையில் பயணித்துள்ளார். இதன்போது, நடத்துனர் அவரைப் பேருந்தில் இருந்து இறங்குமாறு அல்லது பாதுகாப்பாக ஏறிப் பயணிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் நடத்துனருக்கும், மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]
பாடசாலை போக்குவரத்து சேவை தொடங்க யோசனை

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் பாடசாலை மறுசீரமைப்புச் செயன்முறையின் போது எழும் போக்குவரத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், பாடசாலை மாணவர் போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளைக் குறைத்து முறையான போக்குவரத்து பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும், “சிசு செரிய” பாடசாலை போக்குவரத்துச் சேவையை மிகவும் வினைத்திறனாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்துவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. பாடசாலை மாணவர் போக்குவரத்துச் சேவையை முறைப்படுத்துவது தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (09) முற்பகல் […]
திருமலை புத்தர் சிலை: விளக்கமறியல் நீடிப்பு

திருகோணமலை கடற்கரையில் புத்தர் சிலையை வைத்த விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 4 பெளத்த பிக்குகள் உற்பட 10 பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பிணை மறுக்கப்பட்ட நிலையில், பிரதிவாதிகள் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிணை மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்கள், பெப்ரவரி 3ஆம் திகதியன்று நிராக்கப்பட்டது. அதனை அடுத்தே, பிணைமனுக்கோரிக்கை […]
கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை

இந்திய அரசாங்கத்தின் அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தெவ்னிமோர் நினைவுச்சின்னங்களை தரிசிப்பதற்காக கொழும்பு கங்காராம விகாரைக்கு வருகை தரும் பக்தர்கள், செவ்வாய்க்கிழமை (10) இரவு 10 மணிக்கும் முன்னதாக வரிசைகளில் இணையுமாறு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர் கோரிக்கை விடுத்துள்ளார். புனித தெவ்னிமோர் சின்னங்களை எதிர்வரும் புதன்கிழமை (11) காலை 6 மணிக்கு மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளமையினால் இந்த வேண்டுகோளை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு தலைவர் நியமனம்

வடக்கு மாகாண கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் தலைவராக க.பிரகாஸ், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் இன்றைய தினம் திங்கட்கிழமை (9) நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் செயலகத்தில் வைத்து இவருக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. இன்று தொடக்கம் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மார்ச்சில் செம்மணி அகழ்வுப் பணிகள்!

செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் திங்கட்கிழமை (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு பணிகளை முன்னெடுக்க இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் முதல் யாழ்ப்பாணத்தில் கடும் […]
மக்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் போராட்டங்களைத் தடுக்க முடியாது – முஜிபுர் ரஹ்மான்
அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும்போது, அதனை கட்டுப்படுத்துவதற்கான முன் ஆயத்தமாகவே அரசாங்கம் அவரசகால சட்டத்தை அனுமதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் மக்களுக்கு வழங்கிய எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறினால், அதற்கு எதிராக மக்கள் அணிதிரள்வதை அவசரகால சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்துக்கு தடுக்க முடியாமல் போகும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி காரியாலயத்தில் திங்கட்கிழமை (9) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். […]
நைஜீரியாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து; 30 பேர் பலி

நைஜீரியாவின் கானோ மாகாணத்தில் குவானர் பார்டே நகரில் உள்ள நெடுஞ்சாலையில் பயணிகள், சரக்குகளை ஏற்றிச் சென்ற ட்ரெய்லர் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லொறி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் லொறியில் பயணித்த 30 பேர் உயிரிழந்ததோடு இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். […]