போதைப்பொருள் கடத்தலில் ஆண் போன்று வேடமணிந்த பெண் கைது!

ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” என்ற பெயரில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து மேல்மாகாணத்தின் வடக்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆவார். சந்தேக நபரான பெண்ணிடமிருந்து சுமார் 150 இலட்சம் ரூபா பெறுமதியான ஹேஷ் மற்றும் குஷ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட பெண், தனது தலை முடியை வெட்டி ஆண் போன்று வேடமணிந்து “களுபாலம் டிலு” […]
புற்றுநோயாளர்கள் நாட்டில் அதிகரிப்பு!

நாட்டில் நாளாந்தம் சுமார் 100 புதிய புற்றுநோய் நோயாளிகள் பதிவாகி வருவதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். புதிய புற்றுநோய் ஆரம்பகால கண்டறிதல் மையம் திறப்பு நிகழ்வில் உரையாற்றிய அவர், தினமும் சுமார் 40 பேர் புற்றுநோயால் உயிரிழப்பதாகவும் குறிப்பிட்டார். அதேபோல், தினசரி 15 பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்ற நிலையில், அவர்களில் மூன்று பேர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவித்தார். இதனைத் தடுக்கும் வகையில், 20 வயதிற்குப் பிறகு பெண்கள் மாதந்தோறும் சுய மார்பகப் […]
வீதியை திருத்தி தருமாறு கோரி போராட்டம்

மண் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களினால் வீதிகள் சேதமடைந்து வருவதாகவும் உடனடியாக வீதி திருத்தி தரப்பட வேண்டும் என கோரி அவ்வீதியில் வசித்து வருகின்ற எட்டு குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நேற்றையதினம் முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்ஓயா ஆற்றிலிருந்து கனரக வாகனங்களினால் மணல் கொண்டு செல்லப்படும் குறித்த வீதி கடுமையாக சேதமடைந்துள்ள போதிலும் கல்ஓயா ஆற்றுக்கு அருகில் உள்ள எட்டு குடும்பங்கள் குறித்த வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வீதியை மறித்த அப்பகுதி மக்கள் […]
ஸ்டீவ்ஸ் மியூசிக் நிறுவனம் ஒன்டாரியோ மற்றும் கியூபெக்கில் பெரும்பாலான கிளைகளை மூட முடிவு?

ஒட்டாவா, டொரோண்டோ மற்றும் மான்ட்ரியல் நகரங்களின் இசை உலகில் பல தசாப்தங்களாக முக்கியமான நிறுவனமாக விளங்கிய ஸ்டீவ்ஸ் மியூசிக், விரைவில் அதன் பெரும்பாலான கடைகளை மூடவுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை, அதன் ஐந்து கிளைகளிலும் உள்ள பொருட்களை முழுமையாக விற்பனை செய்து முடிக்கும் (liquidation) நடவடிக்கையை தொடங்குவதாக அந்த நிறுவனம் அறிவித்தது. ஒட்டாவா கிளை மேலாளரின் தகவலின்படி, சேன்-காதரின் தெருவில் (rue Sainte-Catherine) உள்ள கிளையைத் தவிர, மற்ற அனைத்து கிளைகளையும் மூடுவதுதான் திட்டமாகும். “இதனை நான் ஒரு […]
போராட்டமின்றி சம்பளம் பெற்றுக்கொண்டோம்!

கவந்தலாவை, பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட ஒஸ்போன் குரூப் காசல்ரி தோட்ட தொழிலாளர்களின் நாள் சம்பளமாக 1,750 ரூபா என்ற அடிப்படையில் ஜனவரி மாதத்திற்கான சம்பத்தை பெற்றுள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பற்றுசீட்டில் நாள் சம்பளம் 1,550 ரூபாஎன்ற அடிப்படையிலும் அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் வரவு கொடுப்பனவு வேலை நாட்களின் அடிப்படையில் தோட்ட காரியாலயத்தில் சம்பளம் கடந்த 07 ஆம் திகதி வழங்கப்பட்டதாகவும், மேலும் 27 வருட சேவை காலத்தில் போராட்டமின்ற 400 ரூபா அதிகரித்த […]
கிராண்ட்பாசில் ஹெரோயினுடன் ஒருவர் கைது
கிராண்ட்பாஸ், சிறிபாலபிந்து மாவத்தை பகுதியில் 25 கிராம் 150 மில்லி கிராம் ஹெராயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 40 வயதுடைய சந்தேக நபர் புதிய களனி பாலம் பகுதியில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம்; 27 ஆம் திகதி வரை எதுவும் கூற முடியாது!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் குறித்து இந்த நேரத்தில் நேரடியான கருத்தை தெரிவிக்க முடியாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சு எடுத்துள்ள முடிவுக்கு எதிராக மீனவர்கள் தற்போது நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், இது தொடர்பாக 27 ஆம் திகதி வரை எதுவித கருத்தை தெரிவிக்க […]
கல்லூரி எதற்காவது நடிகர் விஜய்யை முதல்வர் ஆக்கலாம் – செல்லூர் ராஜு
விஜய்யை ஏதாவது கல்லூரிக்கு வேண்டுமானால் முதல்வர் ஆக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து எஸ் ஆர் வி நகரில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை இன்று நடத்தப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், செங்கோட்டையன் செல்லாத […]
கிராம உதவியாளர்கள் காஞ்சிபுரத்தில் போராட்டம்: 183 பேர் கைது
காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக 183 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் காஞ்சிபுரம் மாவட்ட கிளை சார்பில் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தொடர்ந்து 5 நாள்களாகக் காத்திருக்கும் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் திடீரென காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் செய்தனர். […]
ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழகத்தில் தேர்தல்?

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் சூசகமாகக் கூறியிருக்கிறார். சென்னையில் இன்று பாஜக தேசிய அமைப்புச் செயலர் பி.எல். சந்தோஷ் தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பி.எல். சந்தோஷ், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் 65 நாள்கள்தான் இருக்கிறது. முதல்கட்டமாகவே தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் […]