முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு விரைவில் – ஸ்டாலின்
விரைவில் முதலீடுகள் செயல்பாட்டு மாநாடு நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை முதல்வர் ஸ்டாலின் இன்று(பிப். 9) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். ரூ.9,000 கோடி முதலீட்டில் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலை இன்று திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வாகன உற்பத்தி மையம் தமிழ்நாடு; […]
மறு ஆய்வுக் குழுவுக்கு சென்றது ஜனநாயகன்!

ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. தணிக்கை வாரியத்தின் முடிவை ஏற்று படத்தை மறு ஆய்வுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வுக் குழு பாா்வையிட பரிந்துரை செய்த தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து […]
முந்தைய அரசாங்கத்தின் இ-விசா வழக்கு – மீண்டும் மார்ச் 25

முந்தைய அரசாங்கத்தின் போது இ-விசா வழங்கும் செயல்முறையை 2 தனியார் நிறுவனங்களுக்கு மாற்ற அப்போதைய அமைச்சரவை எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை மார்ச் 25 ஆம் திகதி மீண்டும் கூட்ட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் இந்த மனு இன்று (09) விசாரணைக்கு […]
யாழ்.நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் வெடிபொருட்கள் மீட்பு

யாழ்.நகர் பகுதியில் உள்ள வெற்றுக்காணிக்குள் இருந்து ஒரு தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பின் புறமாக உள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை நேற்றையதினம்(08.02.2026) துப்பரவு செய்த வேளை, துப்பரவு பணியாளர்கள் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்றினை அவதானித்துள்ளனர். அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பொதி தொடர்பில் சோதனையிட்டுள்ளனர். அதனுள் கையெறிகுண்டு, கலிபர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் காணப்பட்டுள்ளன. பொதியினுள் […]
2000 ரூபா நாணயத்தாளால் சிக்கல்?

புதிதாக வெளியிடப்பட்ட இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் தொடர்பில் சில வங்கி கிளைகளில் மக்களுக்கு அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பணம் வைப்பிலிடும் தானியங்கி இயந்திரங்களில் குறித்த புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாளை வைப்பிலிட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சில வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களால் புதிய இரண்டாயிரம் ரூபா நாணயத்தாள் நிராகரிக்கப்படுவதால் தாம் சிக்கலை எதிர்நோக்குவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்திருந்தனர். நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஹட்டன் பகுதியில் சில அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் புதிய இரண்டாயிரம் ரூபா […]
ட்ரம்ப் – நெதன்யாகு சந்திப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் எதிர்வரும் 11ஆம் திகதி வொஷிங்டனில் சந்தித்துப் பேசவுள்ளதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த முக்கிய ஆலோசனைகளை மேற்கொள்வதே இந்தச் சந்திப்பின் பிரதான நோக்கமாகும். முதலில் பெப்ரவரி 18ஆம் திகதி நடைபெறவிருந்த இந்தச் சந்திப்பு, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஒரு […]
மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
இலங்கை மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஜனவரி 2026 இல் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களால் சிறிதளவு சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.2 சதவீதம் சிறிதளவு குறைவு எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2025 இறுதியில் மத்திய வங்கி வைத்திருக்கும் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துக்களின் மதிப்பு 6,838 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளது, இது ஜனவரி 2026 இல் 6,824 மில்லியன் அமெரிக்க […]
பொன்னாலையில் விபத்து; ஒருவர் பலி
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று(9) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், பொன்னாலை சந்தியில் இருந்து மாதகல் பக்கம் செல்கின்ற வீதியால் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியோரம் நின்ற பனைமீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக […]
யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி முன் இன்று விசாரணைக்கு வந்தது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. […]
டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்கு இழப்பீடு!

டித்வா புயலினால் சேதமடைந்த பண்ணைகளுக்காக 3.2 பில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான பணம், செலுத்தப்பட்டுள்ளதாக கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை அனர்த்தத்திற்குப் பிந்தைய அவசர தடுப்பூசித் திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன இவ்வாறு தெரிவித்தார். அங்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், மாடுகள், பன்றிகள், ஆடுகள், பிரொய்லர் கோழிகள் அழிக்கப்பட்ட பண்ணைகளுக்கு இந்த இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரதி […]