தங்கம் மீண்டும் விலை அதிகரிப்பு!

கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 395,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 365,400 ரூபாவாக காணப்படுகிறது. முன்னதாக இலங்கையில் தங்கத்தின் விலையானது 4 இலட்சம் ரூபாவை கடந்திருந்த நிலையில் கடந்த சில நாட்களாக வீழ்ச்சிப் போக்கை பதிவு செய்திருந்தது. இவ்வாறான சூழலில் தங்கத்தின் விலை மீண்டும் நான்கு இலட்சத்தை நெருங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலக சந்தையில் தங்கத்தின் விலையானது மீண்டும் 5000 […]
11 முக்கிய ஒப்பந்தங்களில் இந்தியா - மலேசியா கைச்சாத்து!

பிரதமர் மோடி, மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் முன்னிலையில் இரு நாடுகள் இடையே 11 முக்கிய ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரதமர் மோடி 2 நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றுள்ளார். தலைநகர் கோலாலம்பூரில் நேற்று முன்தினம் இந்திய வம்சாவளியினர் பங்கேற்ற கூட்டத்தில் பேசினார். இரண்டாம் நாளான நேற்று கோலாலம்பூரில் உள்ள பெர்தானா புத்ராவில் (மலேசிய பிரதமர் அலுவலகம்) அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராகிமுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் முன்னிலையில் இரு நாடுகள் இடையே […]
சண்டிலிப்பாய் பகுதியில் இளைஞர் சடலம் மீட்பு
யாழ். மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சண்டிலிப்பாய் பகுதியில், இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வாய்க்காலின் வான்கதவில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய பிரதமரின் தலைமைத் தளபதி பதவி விலகல்

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மரின் தலைமைத் தளபதி மோர்கன் மெக்ஸ்வீனி பதவி விலகியுள்ளார். அமெரிக்காவுக்கான முன்னாள் பிரித்தானிய தூதுவர் லோர்ட் மண்டெஸ்லோன் உடனான தொடர்பு காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெப்ரி எப்ஸ்டீனுடன், லோர்ட் மண்டெஸ்லோன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தனர் என குற்றச்சாட்டுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடா-அல்பெர்டா பிரிவினைவாதிகள் குறித்து வாதப் பிரதிவாதங்கள்!

னடாவின் முன்னாள் கூட்டாட்சி லிபரல் கட்சித் தலைவர் மற்றும் அமைச்சரவைக் குழு உறுப்பினரான ஸ்டீபன் டியோன், அல்பெர்டாவில் உருவாகிக் கொண்டிருக்கும் பிரிவினைவாத இயக்கத்தை கடுமையாக விமர்சித்து, சுயாட்சி வாக்கெடுப்பின் முடிவை அடிப்படையாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவென்பதை அல்பெர்டா முதல்வர் டானியல் ஸ்மித் தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “பிரிவினைவாதத்தின் மூலம் செய்யப்படும் அழுத்தத்திற்கு எனக்கு எந்த பொறுமையும் இல்லை,” என டியோன் ஞாயிற்றுக்கிழமை காலை ஒளிபரப்பான Rosemary Barton Live நிகழ்ச்சியில் வழங்கிய பேட்டியில் […]
சர்வதேச கல்வி அனுமதி; கனடா செல்லும் மாணவர் விசாவில் மாற்றம்?

சர்வதேச மாணவர்களுக்கான கல்வி அனுமதி (Study Permit) விதிகளில் முக்கிய மாற்றங்களை கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது. கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு (IRCC) 2026 முதல் நடைமுறை செய்யப்படும் புதிய கல்வி அனுமதி (Study Permit) விதிகளை அறிவித்து, சில மாணவர்களுக்கு விதிகளை தளர்த்தியுள்ளது. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையைக் குறைக்கும் அதேவேளை, விண்ணப்ப நடைமுறைகளை எளிதாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுடன் இணைந்த கூட்டுப் பாடநெறிகளில் […]
பிராம்ப்டன் நகரின் ‘எனது சுற்றுப்புற கலை திட்டம்’

பிராம்ப்டன் நகரின் ‘எனது சுற்றுப்புற கலை திட்டம்’பிராம்ப்டன் நகரின் ‘எனது சுற்றுப்புற கலை திட்டம்’ (My Neighbourhood Art Project) திட்டத்தின் கீழ், பிராம்ப்டன் தீயணைப்பு மற்றும் அவசர சேவை நிலையம் 213 மற்றும் ரிவர்ஸ்டோன் சமூக மையத்தில் புதிய பொது கலைப்பணிகள் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் கலைப்பணிகள், பிராம்ப்டன் நகரத்தைச் சேர்ந்த கலைஞர் மீகன் லிம் அவர்களால் உருவாக்கப்பட்டு, கலைஞர் மார்ஜ் ஹாண்டோக் அவர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டவை. இவை, பிராம்ப்டன் தீயணைப்பு சேவையின் வரலாறும் ரிவர்ஸ்டோன் சமூகத்தின் […]
வீதி விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு!
உடவளவை – தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில், நேற்று (08) மதியம் இடம்பெற்ற வீதி விபத்தில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த சிறுவன், உடவளவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை உடவளவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீதிமன்ற அவமதிப்பு; வழக்கறிஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு வழக்கறிஞருக்கு உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஜூலை 1, 2024 முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதால், தண்டனை நீடிக்கும் என்று கருதப்படுகிறது. வழக்கறிஞர் பிரியந்த ஜெயதுங்கவுக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வழக்கில் ஆஜரானபோது, பிரதிவாதி வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்களின் உண்மையை மறைத்து, தனக்கு எதிராக கடுமையான தீங்கிழைத்ததாக அறிக்கைகளை வெளியிட்டார், மேலும் அவர்கள் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 289 இன் கீழ் […]
இந்தியக் குழாமுடன் இணையும் வொஷிங்டன்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், அடுத்ததாக நமீபியாவுக்கெதிராக வியாழக்கிழமை (12) நடைபெறவுள்ள போட்டி இடம்பெறும் டெல்லியில் குழாமுடன் வொஷிங்டன் சுந்தர் இணைந்து கொள்வாரென இந்திய அணித்தலைவர் சூரியகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். நியூசிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியைத் தொடர்ந்து கடந்த மாதம் முதல் தோட்பட்டைக்கும், இடுப்புக்குமிடையிலான பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டிகளில் சுந்தர் பங்கேற்றிருக்கவில்லை.