இந்தியாவுக்கெதிரான போட்டி புறக்கணிப்பு: பாகிஸ்தானிடம் காரணம் கேட்கும் சர்வதேச கிரிக்கெட் சபை

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில், ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெறவுள்ள இந்தியாவுக்கெதிரான போட்டியைப் புறக்கணிப்பதில் தவிர்க்க முடியாத மஜூர் சரத்தைப் பயன்படுத்தியமை குறித்து விரிவாக விளக்கமளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் சபை வினவியுள்ளது. கொழும்பில் நடைபெறவுள்ள குறித்த போட்டியைப் புறக்கணிப்பதற்கான காரணமாக அரசாங்க உத்தரவுகளை மேற்கோள் காட்டி பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு சர்வதேச கிரிக்கெட் சபை கடிதம் அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத மஜூர் சரத்து யாதெனில் ஒரு […]
அமெரிக்க கிரிக்கெட் அணி இலங்கை வந்தது!

இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் சில போட்டிகளில் பங்கேற்பதற்காக அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணி நேற்று மாலை இலங்கை வந்தடைந்தது. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 30 பேர் கொண்ட இந்த குழுவினர், இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் UL-1144 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். அமெரிக்க அணியின் முதலாவது போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக கொழும்பு எஸ்.எஸ்.சி […]
37 ஆண்டுகளுக்குப் பின்னர் லண்டனுக்கு விஜயம் செய்யும் முதலாவது நைஜீரிய ஜனாதிபதி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரின் அழைப்பை ஏற்று, நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு மார்ச் மாதம் லண்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அதன்படி, நைஜீரிய ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணி ஒலுரேமி டினுபு ஆகியோர் எதிர்வரும் மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை லண்டனில் தங்கியிருப்பார். இதன்போது விண்ட்சர் கோட்டையில் மன்னரின் விருந்தினராக அவர் தங்கியிருப்பார். 37 ஆண்டுகளுக்குப் பின்னர் […]
பறவைக் காய்ச்சலால் தமிழ்நாடு, பீகார் மாநிலங்களில் 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழப்பு

இந்தியா முழுவதும் H5N1 பறவைக் காய்ச்சல் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, அடையார், காந்தி நகர், பள்ளிக்கரணை, வேளச்சேரி, திருவான்மியூர், இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலை உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து 1,500க்கும் மேற்பட்ட காகங்கள் தொடர்ந்து உயிரிழந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்த காகங்களின் மாதிரிகளை சோதனை செய்ததில் பறவைகளுக்கு H5N1 வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளாக அரசு விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 150க்கும் […]
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்

யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விளான் சந்தியில் இரண்டு குழுவினருக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். பெரிய விளான் மற்றும் பண்டத்தரிப்பு பகுதிகளை சேர்ந்த இருவருக்கிடையே இந்த மோதல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் ஆதரவாக இரண்டு குழுக்கள் அந்த இடத்திற்கு சென்ற நிலையில் மோதல் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதன்போது இருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை […]
ஐ.சி.சி இருபதுக்கு 20; இங்கிலாந்திடம் தோற்றது நேபாளம்!

ஐ.சி.சி இருபதுக்கு 20 உலக கிண்ணத் தொடரின் நேற்றைய (8) நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஜேகொப் பெத்தெல் 55 ஓட்டங்களையும், அணித் தலைவர் ஹரி புருக் 53 […]
சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் ஒன்றை நடத்தி வந்த வைத்தியர் கைது
பேருவளையில் இயங்கி வந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் அடிப்படையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைப் போன்று வேடமணிந்த புலனாய்வு அதிகாரி ஒருவர் கருக்கலைப்புக்காக நேரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, களுத்துறை நீதவான் நீதிமன்றில் தேடுதல் அனுமதியைப் பெற்றுக்கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று நேற்று (8) குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையின் போது, […]
வெடிபொருளைக் கடித்த காட்டு யானை உயிரிழப்பு!

திருகோணமலை, மொரவெவ பகுதியில் ‘ஹக்க பட்டாஸ்’ எனும் வெடிபொருளைக் கடித்த காட்டு யானையொன்று உயிரிழந்தது. மொரவெவ D-9 பகுதியில் விழுந்து கிடந்த நிலையில் இந்த காட்டு யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 8 வயதுடைய இந்த காட்டு யானை, சில தினங்களுக்கு முன்னர் ஹக்க பட்டாஸ் வெடிபொருளைக் கடித்ததால் சுகவீனமடைந்திருந்தது. அதற்கமைய, உணவருந்த முடியாத நிலையில் இருந்த அந்த யானை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் பன்றிகளைக் வேட்டையாடுவதற்காக சிலர் இந்த ஹக்க பட்டாஸைப் பயன்படுத்துவதாக வனஜீவராசிகள் திணைக்கள […]
நாளுக்கு நாள் கல்வித்துறையில் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றது!

ல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன. கல்வித் துறையில் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாக கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கல்வித் துறையில் மனிதவளத்தை ஏமாற்றமடையச் செய்யும் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் விவகாரத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட விதம் போலவே இந்த விவகாரத்திலும் அரசாங்கம் நடந்து வருகின்றது. அதிபர் சேவையின் 3 ஆம் தரத்துக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை 2019 இல் நடைபெற்றது. முதல் சுற்றில் […]
பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழை

காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் […]