நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் புதிய செயற்பாடுகள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

நாட்டின் அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. அதேவேளை, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்து செய்ய ஏற்கனவே அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இவ்விடயம் தொடர்பில் மேலும் […]
மீண்டும் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க யோசனை!

நாட்டில் நிலவும் தற்போதைய பொருளாதார சூழலில் எரிவாயு விலை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு […]
புதுக்குடியிருப்பில் தனிமையில் வசித்து வந்த பெண் மீது தாக்குதல்

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் தனிமையில் வசித்து வந்த குடும்ப பெண் ஒருவர் மீது, வீடு புகுந்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (08.02.2026) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பில் அதிகாலை 1 மணியளவில், வீட்டினுள் குறித்த பெண்ணும் மூன்று பிள்ளைகளும் உறங்கி கொண்டிருந்துள்ளனர். இதன்போது, வீட்டு கூரையினை பிரித்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், குறித்த பெண் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலுக்குள்ளான பெண் கூக்குரல் இட்டதனையடுத்து அயலவர்கள் […]
பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையங்களை அமைக்க வடமராட்சி கிழக்கு மக்கள் மறுப்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதிகளில் தனியார் ஒருவருக்கு கோல்ப் விளையாட்டுக்களுடன் கூடிய சுற்றுலா, பொழுதுபோக்கு மையங்கள் அமைப்பதற்காக 300 ஏக்கர் காணியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நேற்றைய தினம், மணல்காடு, குடத்தனை வடக்கு, பொற்பதி கிராம மக்களுடன் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த தனியார் நிறுவனத்தால் மக்களிடம் காணியை பெற்றுக்கொள்வதற்காக விருப்பம் கோரியபோது பிரதேச மக்களால் தமது கிராம சூழலில் காணிகளை வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த […]
அரசமைப்புப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய நகர்வு வரவேற்கத்தக்கது!

தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்துக்குள் இருந்தே கணக்காய்வாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பதானது சரியான பாதையில் பயணிப்பதை முன்னிறுத்தி அரசமைப்புப் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட மிக முக்கிய நகர்வாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கடந்த வாரம் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் கூடிய அரசமைப்புப் பேரவை, தேசிய கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமான சமுதிகா ஜெயரத்னவை தலைமை கணக்காய்வாளர் நாயகமாக நியமிப்பதற்கு ஏகமனதாக அனுமதி வழங்கியதை அடுத்து, அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். […]
மாகாண சபைத் தேர்தலை வடக்கு – கிழக்கு மக்களுக்காக விரைவில் நடத்த வேண்டும்
வடக்கு, கிழக்கு மக்களுக்காக, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கம்பஹா – திஹாரிய பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர், “மாகாண சபை தேர்தலை நடத்தி, வடக்கு மக்களுக்கான அதிகாரத்தை வழங்க, அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும். நாட்டில் அடுத்து நடத்தப்படவுள்ள எந்தவொரு தேர்தலையும் சந்திப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ளது. […]
புனித தேவ்னிமோ புத்தரின் தாதுக்களை வழிபட்ட அங்கவீனமடைந்த போர் வீரர்கள்!

ராகம ரணவிரு சேவன, அபிமன்சல மற்றும் மிஹின்து செத் மெதுர ஆகிய நிலையங்களில் சிகிச்சை பெற்றுவரும் அங்கவீனமடைந்த போர் வீரர்கள், கொழும்பு கங்காராமய விகாரையில் நடைபெறும் புனித தேவ்னிமோரி புத்தர்தாதுக்கள் கண்காட்சியை வழிபடுவதற்காக நேற்று (08) சென்றிருந்தார்கள். இந்நிகழ்வில் புத்தசாசனம், மத மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும், பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்தியாவில் இருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட புனித தேவ்னிமோரி […]