விவசாயி மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு: ஐகோர்ட் கிளையில் தென்காசி சப்-கலெக்டர் ஆஜராகி விளக்கம்!

மதுரை:

தென்காசி அருகே விவசாயி ஒருவர் போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரத்தில், சப்-கலெக்டர் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த பெருமாள் சேட் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனது தோட்டத்தில் கள் சோதனை செய்ய வந்த ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா, தனது மகன் மணிகண்டனை ஆபாசமாகத் திட்டியதோடு துப்பாக்கியால் காலில் சுட்டதாகவும், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “விசாரணையின் போது மணிகண்டன் போலீசாரைத் தாக்கியதால், தற்காப்பிற்காகவே போலீசார் சுட்டனர்” என்று தெரிவித்தார். இது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சப்-கலெக்டரை காணொலி காட்சி மூலம் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆஜரான சப்-கலெக்டர், துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக உறுதி அளித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, சப்-கலெக்டரின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார். அதுவரை இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்ற இடைக்காலத் தடையையும் நீதிபதி நீட்டித்தார்.
#MaduraiHighCourt #TenkasiNews #PoliceFiring #JusticePugalendhi #FarmersIssues #AlangulamPolice #LegalUpdate #CBIInvestigation #SubCollector #BreakingNews #TamilNaduPolice #HumanRights #MaduraiBench #CourtHearing #TenkasiFarmer #April29

hiv

இலங்கையில் ஆண்களுக்கு எச்.ஐ.வித் தொற்று அதிகரிப்பு

October 14, 2026

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று அதிகரிப்பதற்கு ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணியாக அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான

china

கொழும்பு போர்ட் சிட்டியில் சீன பாதாள குழுவின் முக்கியத் தலைவர் கொழும்பில் கைது

October 14, 2026

கொழும்பு போர்ட் சிட்டியில் (Colombo Port City) முதலீடு செய்ய வந்த சீன முதலீட்டாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து, அவர்களிடம்

Saji

அனோஜனின் மரண தண்டனை இரத்துக்கு நன்றி தெரிவித்தார் சஜித்

October 14, 2026

கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவரும், சவூதி அரேபியாவில் பணிபுரியச் சென்றவருமான பொறியாளர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை இரத்துச் செய்வதற்கு

rai

இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டல கொந்தளிப்பு நிலை

October 14, 2026

நாட்டை அண்மித்துள்ள வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் கீழ் வளிமண்டல கொந்தளிப்பு நிலை காரணமாக, மழை அளவு மேலும் அதிகரிக்கும்

vimal

போலிப் புகைப்படத்தைப் பயன்படுத்தியதாக விமல் வீரவன்ச மீது குற்றச்சாட்டு

October 14, 2026

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலியாக உருவாக்கப்பட்ட புகைப்பட

GL

சிறையில் உள்ள மதத் தலைவர்களின் ஆடை குறித்து அரசு ஏமாற்று வேலை செய்கிறது – ஜீ.எல். பீரிஸ்

October 14, 2026

சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகள் உள்ளிட்ட மதத் தலைவர்களை வெளியிலும் நீதிமன்றங்களுக்கும் அழைத்துச் செல்லும்போது அவர்கள் அணியவேண்டிய உடைகள் குறித்து

basil

பசிலை கைதுசெய்யுங்கள் – சர்வதேச பொலிஸாரின் உதவியை பெறுங்கள் -நீதவான் உத்தரவு

October 14, 2026

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைதுசெய்து தன்முன்னாள் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்

srisena

அரசமைப்பினை பின்பற்றியே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கினேன்- மைத்திரி

October 14, 2026

அரசமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையிலேயே பொதுபலசேனாவின் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பை வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

nihal abeyasinga

புதிய அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் ஜனவரியில்

October 14, 2026

அரசியலமைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகள் 2027 ஜனவரியில் ஆரம்பமாகலாம் என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான

anojan

அனோஜனின் மரணதண்டனை இரத்து

October 14, 2026

இலங்கையரான அனோஜன் சிவராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையை சவுதிஅரேபிய நீதிமன்றம் இரத்து செய்துள்ளது என பிரதிவெளிவிவகார அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்துள்ளார்.

IMG_9428

விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம்

October 14, 2026

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விஜேராம பகுதியில் புதிய செயற்கை நுண்ணறிவு (AI) மையம் ஒன்றைத் நிறுவுவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார

IMG_9427

திக்கம் வடிசாலையை மீள இயக்க நடவடிக்கை!

October 14, 2026

யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலையை மீள இயக்கி, ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்தி நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல்