சென்னை: தமிழக அரசியலில் நிலவும் அசாதாரணச் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கைகோர்த்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக வெளியாகும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதைத் தடுக்கவே, பரம்பரை எதிரிகளான இந்த இரு கட்சிகளும் ஒரே இரவில் ஒன்றிணைந்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்நாள் எதிரிகளாக இருந்த இரு திராவிடக் கட்சிகளும் ஒரே இரவில் ஒன்றிணைந்துள்ளன. இது தமிழகத்திற்காகவோ அல்லது மதச்சார்பின்மைக்காகவோ அல்ல; விஜய் என்கிற ஒரு மனிதனைத் தடுத்து நிறுத்தவே இந்த நாடகம் அரங்கேறுகிறது. பாஜக-வின் பி-டீமுடன் (அதிமுக) கைகோர்த்துக்கொண்டு தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று திமுக இனி சொல்ல முடியாது. ‘நிலையான அரசு’ என்பது அதிகாரத்தைக் காக்கத் துடிக்கும் இரு பயந்த கட்சிகளின் அரசியல் மொழி. திமுக இன்று தனது முகமூடியைக் கழற்றிவிட்டது. யார் துரோகி என்பது இப்போது மக்களுக்குத் தெரியும்” எனச் சாடியுள்ளார். மேலும், இந்தச் சூழலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறி விஜய்க்கு ஆதரவு அளித்தது சரியான முடிவு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக மற்றும் அதிமுக-வின் இந்தத் திடீர் நெருக்கம் அரசியல் தளத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
#ManickamTagore #Congress #DMK #ADMK #Vijay #TVK #BreakingNews #May8 #TamilNaduPolitics #UnnaturalAlliance #ThalapathyVijay #VijayAsCM #Stalin #EPS #BetrayalPolitics #NewGovernmentTN #ElectionResults2026 #Secularism #DravidianPolitics #VijayMakkalIyakkam_“`