தமிழ் இனப்படுகொலை நினைவு நாளை அனுசரிக்கவும், படுகொலைக்கு பலியானவர்களின் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் வட கரோலினாவைச் சேர்ந்த தமிழ் அமெரிக்கர்கள் அங்குள்ள ‘கேரி’ (Cary, NC) நகரில் ஒன்றுகூடினர். ஈழத் தமிழர்களுக்கான நீதியை ஆதரித்தும், அவர்களுக்கான சுதந்திர பொதுவாக்கெடுப்புக்கு (Independence referendum) அழைப்பு விடுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்றத் தீர்மானத்தை (House resolution) முன்மொழிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைலி நிக்கல் (@WileyNickel), இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமிழ் சமூகத்துடன் தனது தார்மீக ஆதரவை வெளிப்படுத்தி ஒற்றுமையாக நின்றார்.

இந்நிகழ்வின்போது தமிழ் சமூகப் பிரதிநிதிகள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து நினைவுகூரல், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை (Right to self determination) குறித்து தங்களது வலுவான கருத்துக்களையும் எண்ணங்களையும் பகிர்ந்துகொண்டனர்.