வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை ஒப்படைக்க இன்னும் காலம் வேண்டுமா?

வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் நான் மேலதிக கேள்விகளை முன்வைத்தேன்.

அமைச்சர் தனது பதிலில் பல விடயங்களை விரிவாக விளக்கினார். ஒவ்வொரு பதிலுக்கும் தனித்தனியாக கேள்வி எழுப்புவதற்கான அவசியம் இருந்தபோதிலும், பாராளுமன்ற நேரக் கட்டுப்பாடு காரணமாக அனைத்தையும் விவாதிக்க முடியவில்லை.
அமைச்சர் தனது பதிலில் ‘அதியுயர் பாதுகாப்பு வலயம்’ என்ற விடயத்தை குறிப்பிட்டார். ஆனால், அண்மையில் நடைபெற்ற பாதுகாப்புச் சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், யுத்தக் கால சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை, தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து அதே வகையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே கலந்துரையாடப்பட்ட முக்கிய கருத்தாக இருந்தது.

மேலும், து252 முதல் து256 வரை உள்ள பலாலி பகுதிகளிலும், து246, து 248 மற்றும் து 257 ஆகிய மயிலிட்டி பகுதிகளிலும் அமைந்துள்ள மதத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல முடியும் என அமைச்சர் குறிப்பிட்டார். ஆனால், நடைமுறை நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. புனித செபஸ்தியார் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை, வசாவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை வித்தியாலயம் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை தொடர்கிறது. குறிப்பாக, புனித செபஸ்தியார் தேவாலயம் இருந்த இடமே இன்று இல்லாத நிலையில், அங்கு வழிபடுவதற்கு மதத் தலம் உள்ளது எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.

அமைச்சர் அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்து, மாவட்ட பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார். எனினும், காணி கோரி விண்ணப்பித்துள்ள 44 பேரில் வெறும் 11 பேருக்கு மட்டுமே காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காணி உரிமையாளர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அணுகுமுறையாக இல்லை. மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில், சுமார் 80 இலட்சம் ரூபாய் செலுத்தி தனியார் காணிகளைப் பெற்றுக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இங்கு எழும் அடிப்படை கேள்வி என்னவென்றால், தனியார் காணிக்குள் இராணுவத்தினருக்கு கட்டடங்களை நிர்மாணிக்க அனுமதி வழங்கியது யார்? உரிமையாளர்களின் அனுமதியின்றி தனியார் காணிகளில் கட்டடங்களை நிர்மாணித்துவிட்டு, பின்னர் அதற்காக 80 இலட்சம் ரூபாய் செலுத்தி காணியை அரசிடம் ஒப்படைக்குமாறு கூறுவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயற்பாடாகும்.

எனவே, வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் எந்தவித தாமதமும் இன்றி, எந்த நிபந்தனையும் இன்றி, அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த காணி பிரச்சினைக்கு அரசு நீதி, சட்டம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தரத் தீர்வை வழங்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அசல் மற்றும் அரச காணிகளின் மொத்த பரப்பளவு எத்தனை,? தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து விடுவிக்கப்பட்ட காணிகளின் பரப்பளவு, அமைவிடம் மற்றும் திகதிகள், இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் எஞ்சியுள்ள காணிகளின் பரப்பளவு, மற்றும் எஞ்சியுள்ள காணிகளை விடுவிப்பதற்கான அரசாங்கத்தின் காலவரையறை என்ன ?

வலிகாமம் வடக்கில் 16 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும், 3 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படாமலும் உள்ள நிலையில்,பொதுமக்கள் காணிகளை விடுவிக்கும் பணிகளை நிறைவு செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

மயிலிட்டி மற்றும் பலாலியில் நடந்த போராட்டங்கள் தொடர்பாகவும், மயிலிட்டி கன்னிக்கன் மாதா கோவில், வாசவிளான் செங்குந்த விநாயகர் ,மண்ணம்பிராய் பிள்ளையார் கோவில், புனித செபஸ்டியான் தேவாலயம், மயிலிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மற்றும் வாசவிளான் ஸ்ரீ வேலுப்பிள்ளை காணிகளை மீட்டெடுக்க யாழ்ப்பாண மாவட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை விரிவாக்கம், 551 பிரிவுப் பகுதியில் உள்ள காணிகள், இரணைமடு கனகாம்பிகை அம்மன் கோவில், இரணைமடு சந்தி மற்றும் விவசாயத் திணைக்களத்தைப் பாதிக்கும் காணிகளை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கேப்பாப்பிலவில் எஞ்சியுள்ள 59 ஏக்கர் சிவில் காணிகளை விடுவிக்க முல்லைத்தீவில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆகிய கேள்விகளை முன்வைத்துள்ளார்.

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109