ரொறன்ரோ அமெரிக்க தூதரக துப்பாக்கிச் சூடு: கூலிப்படை பின்னணி அம்பலம்

ஆகஸ்ட் 06, 2026 — ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணியில் ‘கூலிக்குக் குற்றங்களில் ஈடுபடும்’ (Criminals-for-hire) நெட்வொர்க் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 15 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ரொறன்ரோ பொலிஸ் தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ் (Myron Demkiw) இக்கைது நடவடிக்கை குறித்து அறிவித்தார். சம்பவத்தின் பின்னணி: சதித்திட்டம்: […]
மலாபேயில் தெருநாய்களுக்கு உணவளித்த பெண் மீது தாக்குதல்

மலாபே பகுதியில் தெருநாய்களுக்கு உணவளித்த பெண் ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பரவிய சம்பவம் தொடர்பில், விலங்கு நல மன்றம் (AWF) அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. தன் சொந்தச் செலவில் தெருநாய்களைப் பராமரித்து வரும் இப்பெண், அவற்றுக்கு உணவு வழங்குவதுடன் ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் கருத்தடைத் திட்டங்களுக்கும் உதவி வருவதாக AWF தெரிவித்துள்ளது. முன்னதாக தனது தனிப்பட்ட சொத்தில் உள்ள நாய்கள் தொடர்பான பிரச்சினை ஒன்றின்போதும் இவருக்கு உதவியுள்ளதாகக் குறிப்பிட்ட AWF, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து […]
நண்பனை கொன்று சடலத்துடன் செல்ஃபி எடுத்த நண்பர்கள்

மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை: உடலுடன் செல்ஃபி எடுத்த கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் சிக்கலாம்பாளையத்தில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் அஸ்வின் என்ற இளைஞர் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். அஸ்வினின் கழுத்தில் கத்தியால் குத்தியும், சுத்தியலால் தாக்கியும் கொலை செய்த இச்சம்பவத்தில் தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் மாதேஷ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்தச் கொடூரக் கொலைக்குப் பிறகு உயிரிழந்தவரின் உடலுடன் கொலையாளிகள் செல்ஃபி […]
லாஃப்ஸ் அறிவிப்பு

ஓகஸ்ட் மாதத்திற்கான உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலைகளில் எந்தவித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என லாஃப்ஸ் கேஸ் (LAUGFS Gas) நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, லாஃப்ஸ் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் இந்த மாதம் முழுவதும் மாற்றமின்றி தொடரும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் அனல்காற்றில் 19 பேர் மரணம்

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் (Lee Jae Myung), நாட்டில் வீசும் அனல்காற்றைச் சமாளிக்கத் தேசிய நெருக்கடிநிலையை அறிவித்துள்ளார். கடும் வெப்பத்தால் 19 பேர் மாண்டுள்ளனர். மே மாத நடுப்பகுதி முதல் இம்மாதம் (ஆகஸ்ட்) வரை சுமார் 2,000 பேர் வெப்பம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளால் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைப் பாதுகாக்கும் முயற்சிகளைத் துரிதப்படுத்தும்படி திரு லீ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். மோசமான வானிலை நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுவதால், தேசிய நெருக்கடிநிலை முறையை முழுமையாக மாற்றியமைக்கத் […]
சகிப் அல் ஹசனின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு

வங்கதேச அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும், மகுரா-1 தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சகிப் அல் ஹசனின் பூர்வீக வீடு மகுரா நகரில் உள்ள Keshabmor பகுதியில் புதன்கிழமை மாலை தாக்கப்பட்டுள்ளது. தில்லியில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆற்றிய காணொளி ஊடக சந்திப்பில் சகிப் அல் ஹசன் இணைய வழியில் கலந்துகொண்ட சில மணிநேரங்களிலேயே இத்தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு 8:45 மணியளவில் இடம்பெற்ற இத்தாக்குதலின்போது, அடையாளம் தெரியாத […]
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலும்பு முறிவு கிளினிக்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலும்பு முறிவு (Orthopaedic) கிளினிக் இன்று (06.08.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதிய எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் Dr. R. Vimalarajan (Vimalarajan Rajeswaran கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இச்சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது முழுமையான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், ஆரம்ப கட்டமாக எலும்பு முறிவு தொடர்பான வெளிநோயாளர் சேவைகள் வழங்கப்படுவதுடன், தற்போது வைத்தியசாலையில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய எலும்பு முறிவு சத்திரசிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. […]
வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை ஒப்படைக்க இன்னும் காலம் வேண்டுமா?
வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சரிடம் நான் மேலதிக கேள்விகளை முன்வைத்தேன். அமைச்சர் தனது பதிலில் பல விடயங்களை விரிவாக விளக்கினார். ஒவ்வொரு பதிலுக்கும் தனித்தனியாக […]
செம்மணியில் இன்றுடன் 499 என்பு கூடுகள் அடையாளம் !

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 45ஆவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாணய குற்றி ஒன்றும், சிறுவர்களுடைய ஆடைகளின் பொத்தான்களும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் […]
கேம்பிரிட்ஜில் ‘இபோகேன் சிகிச்சை அனுபவத்திற்குப்’ பின் மர்ம மரணம்: மிசிசாகா நபர் கைது

கனடாவின் கேம்பிரிட்ஜ் (Cambridge) நகரில் நபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில், மிசிசாகாவைச் சேர்ந்த 57 வயது நபர் ஒருவரை வாட்டர்லூ பிராந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 4 ஆம் திகதி வாட்டர்லூ பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த மர்ம மரணம் குறித்து பொலிஸாருக்கு முதன்முதலில் தகவல் கிடைத்தது. விசாரணை விவரங்கள்: சிகிச்சை முயற்சி: உயிரிழந்த நபர், ‘இபோகேன்’ (Ibogaine) என்ற மூலிகை அடிப்படையிலான தனியார் குணப்படுத்தும் நிகழ்வொன்றில் (Healing experience) பங்கேற்க ஏற்பாடு […]