பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் எலும்பு முறிவு (Orthopaedic) கிளினிக் இன்று (06.08.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புதிய எலும்பு முறிவு சத்திரசிகிச்சை நிபுணர் Dr. R. Vimalarajan (Vimalarajan Rajeswaran கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, இச்சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது முழுமையான உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையிலும், ஆரம்ப கட்டமாக எலும்பு முறிவு தொடர்பான வெளிநோயாளர் சேவைகள் வழங்கப்படுவதுடன், தற்போது வைத்தியசாலையில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய எலும்பு முறிவு சத்திரசிகிச்சைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேலும், எலும்பு முறிவு சிகிச்சை விடுதி (Orthopaedic Ward) மற்றும் தனித்துவமான எலும்பு முறிவு சத்திரசிகிச்சை கூடம் (Orthopaedic Operating Theatre) ஆகியவற்றை நிறுவுவதற்கான ஆயத்தப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் காலங்களில் இவ்வசதிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, பிராந்திய மக்களுக்கு உயர்தர எலும்பு முறிவு சிகிச்சை சேவைகளை உள்ளூரிலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
பருத்தித்துறை மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களுக்கு தரமான, விரைவான மற்றும் அணுகக்கூடிய எலும்பு முறிவு சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் இம்முக்கிய முன்னேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.