லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 10 நாள் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த போர்நிறுத்தம் இன்று மாலை 17:00 EST (இலங்கை நேரப்படி நாளை அதிகாலை 2:30 மணி) அளவில் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொயிட் ஹவுஸ் (White House) ஊடாக இந்த முக்கியமான அறிவிப்பை ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
முதற்கட்டமாக இந்த தற்காலிக போர்நிறுத்தம் 10 நாட்களுக்கு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்பின் முழுமையான அறிக்கை:
“மிகவும் மதிக்கப்படுபவரான லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பிபி நெதன்யாகு ஆகியோருடன் நான் இப்போதுதான் சிறந்த உரையாடல்களை மேற்கொண்டேன்.
தங்கள் நாடுகளுக்கு இடையே அமைதியை (PEACE) எட்டுவதற்காக, இன்று மாலை 5 மணி (EST) முதல் முறைப்படி 10 நாள் போர்நிறுத்தத்தை (CEASEFIRE) தொடங்க இந்த இரண்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, எமது நாட்டின் சிறந்த இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோவுடன் இணைந்து, வாஷிங்டன் டி.சி.யில் கடந்த 34 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்விரு நாடுகளும் சந்தித்துப் பேசின.
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே ஒரு நிலையான அமைதியை எட்டுவதற்காக, துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் இராஜாங்க செயலாளர் ரூபியோ ஆகியோருடன் இணைந்து பணியாற்றுமாறு கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி டான் ‘ரேசின்’ கெய்னுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
உலகெங்கிலும் உள்ள 9 போர்களைத் தீர்த்து வைத்தது எனக்குக் கிடைத்த பெருமையாகும், இது எனது 10-வது போராக இருக்கும், எனவே இதைச் செய்து முடிப்போம்! –