போர் வீரர்கள் தின விழாவிற்கு எந்தவொரு அரசியல் பிரமுகர்களும் அழைக்கப்படவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் இன்று(19.05.2026) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தேசிய போர் வீரர்கள் தினம் கொண்டாட்டங்களுகு்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் அழைக்கப்படவில்லை என கேள்வியெழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஜித்த ஹேரத், “ஜனாதிபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வத்தகல மற்றும் முப்படைகளும் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். வேறு யாரும் அழைக்கப்படவில்லை” என்றார்.