யாழ்ப்பாண மாவட்டச் செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஆடிப்பிறப்பு விழா இன்றைய தினம்(17.07) காலை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சிறப்புற நடைபெற்றது.
இவ் ஆடிப்பிறப்பு விழாவில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தார்கள்.

இந் நிகழ்வில் வரவேற்புரையை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திருமதி தயாபரி கிரிதரன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களால் குழுப்பாடல், பல்லியம் இசை நிகழ்வுகளுடன் ஆடிப்பிறப்பின் மகிமை தொடர்பாக மாவட்டச் செயலக உத்தியோகத்தர் திருமதி க. குணதர்சனா அவர்களின் உரை உள்ளிட்ட கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இவ் ஆடிப்பிறப்பு விழாவில் மேலதிக அரசாங்க அதிபர் கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பா.ஜெகரன், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்