முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே, பிரெஞ்சு பயண ஆவணம் உட்படப் பல கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (CID) தமது விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக உத்தியோகபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களைத் திட்டமிட்டு வழிநடத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சலே, தனது உத்தியோகபூர்வ கடவுச்சீட்டுகளை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டதாகத் தொடர்ந்து கூறி வந்தார்.

எவ்வாறாயினும், அவர் வேறு எந்த நாட்டினதும் பிரஜாவுரிமையைப் பெற்றதற்கான பதிவுகள் எதுவும் இல்லாத நிலையிலும், வெளிநாட்டுக் கடவுச்சீட்டு ஒன்றைப் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரது பயண ஆவணங்கள் குறித்த புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சலே பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பிரெஞ்சு கடவுச்சீட்டு குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச சட்டவாதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுரேஸ் சாலே 2018 ஆம் ஆண்டு மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தனது இரண்டு வருட சேவைக் காலத்தை நிறைவு செய்திருந்தார். அதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு வரை, பாரிஸிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் முதலாம் செயலாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றியதுடன், ஐரோப்பாவிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை லண்டனுக்கு இரகசியமாக அழைத்துச் சென்றமையிலும் சுரேஸ் சாலேவுக்குத் தொடர்பிருந்ததாக சாட்சிகளின் வாக்குமூலங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று சொகுசு ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்டு 279 பேர் கொல்லப்பட்டதோடு 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி சுரேஸ் சாலேலே என அரச சட்டவாதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், சுரேஸ் சாலே இக்குற்றச்சாட்டை மறுத்து வருகிறார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவருக்கு எதிராக இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத போதிலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நிலைக்கு விசாரணைகள் நெருங்கியுள்ளதாகப் புலனாய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, தனது ஆப்பிள் ஐபோனின் (Apple iPhone) கடவுச்சொற்களை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு சலே ஒத்துழைப்பு வழங்க மறுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற வேளையிலும், தற்கொலைக் குண்டுதாரிகளை இலங்கையில் சந்தித்ததாகச் சாட்சிகள் கூறும் காலப்பகுதியிலும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களப் பதிவுகளின்படி தாம் வெளிநாட்டில் இருந்ததாக சுரேஸ் சாலே வாதிட்டு வருவதால், அவர் பல கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விடயம் இவ்வழக்கில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தாம் பயன்படுத்திய கடவுச்சீட்டுகளை வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்துவிட்டதாக சுரேஸ் சாலே கூறியிருந்த போதிலும், அவரது சார்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை (Writ) மனுவொன்றில், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வேறு பல கடவுச்சீட்டுகளின் நிழற்படப் பிரதிகள் இணைக்கப்பட்டுள்ளன. தமக்கு முன்னர் தெரிந்திராத இக்கடவுச்சீட்டுகள் குறித்து தற்போது விசாரணைகள் திசைதிருப்பப்பட்டுள்ளதாகப் புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தமக்கு எதிராகப் பிரதான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளவர்களில் ஒருவரும், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடகப் பேச்சாளருமான அசாத் மௌலானாவுடன் தமக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை என சுரேஸ் சாலே புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால், 2020 ஓகஸ்ட் மாதம் அஹுங்கல்லவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் அசாத் மௌலானா தங்கியிருந்த அதேவேளையில், சுரேஷ் சுரேஸ் சாலே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் அதே ஹோட்டலில் தங்கியிருந்தமை குறித்த தகவல்கள் கடந்த புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் கவனம் செலுத்தப்படும் நபர்களில் ஒருவரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் அசாத் மௌலானா இருக்கும் புகைப்படமொன்றும் முன்னைய விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

photo-collage.png (4)

சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள்

November 27, 2026

சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

5L7TVPAVO4R2NAAVMPW3TVLMXY

கியூபெக்கின் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வழக்கில் கனடா உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்குகிறது

November 27, 2026

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பற்ற சட்டத்தின் (Bill 21) அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து கனடா உச்ச நீதிமன்றம்

Suresh Salley Arrested-828580 (1)

முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை

November 27, 2026

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே, பிரெஞ்சு பயண ஆவணம் உட்படப் பல கடவுச்சீட்டுகளைப்

Arun Hemachandra

குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது

November 27, 2026

குக் தீவுகளில் (Cook Islands) சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணொருவரைப் பாதுகாப்பாகவும், அவரது சுயவிருப்பத்தின் பேரிலும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து

14 - 11 - 2025-863649

ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு

November 27, 2026

ரஷ்ய எதிர்ப்புப் பொருளாதாரத் தடைகளில் இணைந்து கொள்ளாமல் இலங்கை பின்பற்றி வரும் கொள்கை ரீதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டிற்கு ரஷ்யா

amnesty

போர் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்–சர்வதேச மன்னிப்புச் சபை

November 27, 2026

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தின் போது மனிதாபிமான உதவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்

photo-collage.png (3)

யாழ். பல்கலை உட்பட நாட்டின் பல பகுதிகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 27, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பகுதியில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி முழுமையான கதவடைப்பை மேற்கொண்டு இன்றையதினம்

fr

Airbus ஊழல் வழக்கு: பிரான்ஸ் நிபுணர் சாட்சியமளிக்க இலங்கை வருகின்றார்

November 27, 2026

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற Airbus விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய பங்காற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடயவியல்

mou

சபையில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி

November 27, 2026

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (27.11.2026) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இலங்கையைத்

Untitled

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை குறித்த முக்கிய தகவல்

November 27, 2026

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதி பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் குறித்த 1,572 ஏக்கர்

Arrest_1

வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர் கைது!

November 27, 2026

வல்வெட்டித்துறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி

niha

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் – ஆளும் கட்சி

November 27, 2026

போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை