மீண்டுமொருமுறை மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிடுகிறது – சஜித் பிரேமதாச

ஏப்ரல் மாதத்தில் 11சதவீதம் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், மீண்டுமொரு முறை 30 சதவீத மின்கட்டண அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் 41.5 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கிறது. இதில் பாதியான 20.5 பில்லியன் ரூபா தரம் குறைந்த நிலக்கரி மோசடியால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற நாடடின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

தரம் குறைந்த நிலக்கரியால் 250 கிகாவோட் மின்சாரம் இழக்கப்பட்டுள்ளது.. இதை ஈடுசெய்ய டீசல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து கொள்வதற்கு 20.5 பில்லியன் ரூபா தேவை . இந்த நஷ்டத்தை நிறுவனங்களிடம் இருந்து அறவிடுவோம் என்று ஜனாதிபதி கூறியிருந்தாலும், உண்மையில் 75 இலட்சம் மின்சார பாவனையாளர்களே இதை செலுத்த வேண்டிவரும்.

நாட்டில் 61 இலட்சம் குடும்பங்களில் 25 இலட்சம் குடும்பங்கள் எரிவாயுவைப் பயன்படுத்தி வருகின்றன. இவர்களுக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை. மே மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள 30வீத மின்கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறுங்கள். டீசல் அலகிற்கு 100 ரூபா வீதம் அறவிடும் திட்டத்தை கைவிட்டு, நஷ்டத்திற்கு காரணமான நிறுவனங்களிடமிருந்து அதை அறவிட வேண்டும்

இன்று விவசாயிகளுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்பட்டவில்லை. பெரும் போக பருவத்தில் ஈர நெல் 85-90 ரூபாவிக்கும், 14வீதமான ஈர நெல் 100-103ரூபாவுக்கும் விற்கப்படுகின்றன. 120ரூபா உத்தரவாத விலையைப் அரசாங்கம் பெற்றுத் தருவோம் என தற்போதைய ஆளும் தரப்பினர் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். 150 ரூபா உத்தரவாத விலையை சட்டமாக்கித் தருவோம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் எந்த ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அரசாங்கம் மின்சார பாவனையாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைவரையும் நிராதரவாக்கிவிட்டுள்ளது.

உரங்களுக்குச் சலுகை விலைகளைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதிகள் பல வழங்கியிருந்தாலும் யூரியா உள்ளிட்ட உர வகைகளுக்கு தற்போது நாட்டில் தட்டுப்பாடு நிலவுகிறது. மத்திய கிழக்கில் இரண்டு வார போர்நிறுத்தம் காணப்படுவதனால், இந்த தருணத்தில் நாட்டிற்குத் தேவையான எரிபொருள், உரம், எரிவாயு உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களின் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நாம் கூறும் சமயங்களில் தமது அடிமைகளை வைத்து சமூக வலைதளங்களில் சேறு பூசி, கேலி செய்யாமல் அவசரகால மூலோபாய திட்டத்தை வகுக்குமாறு நான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறேன்.

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்து காணப்படுகின்றன. மத்திய கிழக்கு யுத்தம் என்ற பெயரில் அதிகரிக்கப்பட்ட எண்ணெய் விலைகளை குறைக்க வேண்டும். அந்த சலுகையை மக்களுக்கு பெற்றுக் கொடுங்கள்

சுகாதாரத் துறை வேலைநிறுத்தம் நிறுத்தப்பட்ட விடயத்தில் அரசாங்கம் மகிழ்ச்சி தெரிவித்தாலும், சுகாதார அமைச்சர், அவர்களினது பிரச்சினைகளை கேட்க வேண்டும். கஷ்ட பிரதேச சேவைக்காக காணப்பட்ட வைத்தியசாலைகள் 393 இலிருந்து 126 ஆக அரசாங்கம் குறைத்துள்ளது. கஷ்டப் பிரதேச சேவைக் காலம் 1 வருடம் என்பதை 2 வருடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. வேலைநிறுத்தங்கள் குறித்து ஊழியர்கள் மீது விரல் நீட்டுவது போல், அமைச்சர் மீதும் விரல் நீட்டப்படுவதனால், இது குறித்து அமைச்சர் அவர்களை அழைத்துக் கலந்துரையாட வேண்டும். இந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கத்தின் இடமாற்றக் குழுக்கள் இப்போது அரசியல்மயமாகி பெலவத்தமயமாகி காணப்படுகின்றன

எப்போதும் சொல்வது போல், சேவை நிரந்தரமாக்கப்படாத டெங்கு ஒழிப்பு உதவியாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறானோர் 301 பேரளவில் காணப்படுகின்றனர். உடனடியாக இவர்களை பணியில் நிரந்தரமாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், பாராளுமன்றத்தில் பணியாற்றிய பெண் ஒருவருக்கு துன்புறுத்தல் நடந்த சந்தர்ப்பத்தில், உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணைகளை முன்னெடுத்த குழுவில் வாய்மொழி துன்புறுத்தலே நடந்ததாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதாவது அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பெண்களுக்கு இத்தகைய தொல்லைகள் நேராதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FBI-Whistleblowers-Protections

சிறுவருடன் பாலியல் ரீதியாக ஈடுபட ஒட்டவாவில் இருந்து அமெரிக்கா சென்ற கனடா நாட்டு நபர் இரகசியத் திட்டத்தின் மூலம் கைது: எஃப்.பி.ஐ

June 19, 2026

குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டலுக்கு எதிரான இரகசிய விசாரணைத் திட்டம் (Undercover sting) ஒன்றைத் தொடர்ந்து, இந்த வாரம் நாஷ்வில்

TFFLHSNFUIL4BRUBNYZNXBWGVI

பாலியல் துஷ்பிரயோக வழக்கு: இரண்டு பெண்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் பிராங்க் ஸ்ட்ரோனாக் குற்றவாளி எனத் தீர்ப்பு

June 19, 2026

பல தசாப்தங்களுக்கு முன்னர் பல பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த பில்லியனர் தொழிலதிபரான பிராங்க் ஸ்ட்ரோனாக்

chemma7

காணாமல் போனோர் அலுவலகம் உண்மை நிலையைக் கண்டறிந்து, தவறிழைத்தவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும்- ஆணையாளர்

June 19, 2026

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார். செம்மணி

canada world cup

இஸ்மாயில் கோனேயின் கொடூரமான காயத்திற்குப் பின் சோகத்தில் மூழ்கிய கனடா அணி: ‘அவருக்காக இந்தத் தொடரை வெற்றிகரமாக முடிப்போம்’

June 19, 2026

கால்பந்தாட்டத்தில் நடுகளக் கூட்டணியில் (Midfield tandem) உள்ள வீரர்கள் ஒருவரையொருவர் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு விளையாடுவது அவசியமாகும். அதற்கமைய, இஸ்மாயில்

carney33333333333

கத்தாருக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 வெற்றிக்குப் பின், வீரர்களின் அறையில் கனடா பிரதமர் கார்னி ஆற்றிய உரை

June 19, 2026

026 ஜூன் 19 கத்தாருக்கு எதிராக வியாழக்கிழமை பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 6-0 என்ற கோல் கணக்கிலான வெற்றிக்குப் பிறகு,

JMDVZSNVIBCJHLCBSR264K4TN4

டொராண்டோவில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் மரணம் சந்தேகத்திற்கிடமானது என காவல்துறை அறிவிப்பு

June 19, 2026

டொராண்டோ நகரின் வடமேற்கு பகுதியில் உள்ள சந்து (Laneway) ஒன்றிற்குள் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆடவர் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான

727288134_1590612522484861_5840860557900271912_n

மிசிசாகா நகரில் வயதான பெற்றோர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: மகனைத் தேடும் காவல்துறை

June 19, 2026

வியாழக்கிழமை மாலை மிசிசாகா (Mississauga) நகரில் உள்ள வீடொன்றிற்குள் வயதான பெற்றோர் இருவர் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்து கண்டெடுக்கப்பட்டதை அடுத்து,

726405909_1750482232973646_2220582764764604601_n

நீதி அமைச்சர் வருகை: செம்மணி புதைகுழி முன் “OMP அலுவலகம் வேண்டாம்” என உறவுகள் அதிரடிப் போராட்டம்!

June 19, 2026

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தந்த நீதி அமைச்சர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான

726717948_1315682237340097_3613316531790611472_n

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை

June 19, 2026

செம்மணி ஆர்ப்பாட்டத்திற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் தடை விதித்து கட்டளையிட்டுள்ளது

court-judge-hammer-gavel-696x398

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் கிருஷாந்திக்கு எதிராக பொய்ப் பிரசாரம் செய்த டாக்டர் அர்ச்சுனா! வீடியோக்களை உடனே தூக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

June 19, 2026

ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் பரப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் இன்று கடுமையான சாட்டையடி

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று

728195759_27644703031792012_903873584557734534_n

நெடுந்தீவில் மக்களின் காணியைக் சிறீலங்கா கடற்படைக்கு வழங்க வேண்டுமென ஒற்றைக் காலில் நிற்கும்அமைச்சர் சந்திரசேகர்

June 19, 2026

நெடுந்தீவில் பொதுமக்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் காணி கடற்படைக்கு வழங்கப்பட்டமைக்குத் தமிழ்த்தேசியப் பேரவையின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று