மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே – திலித் ஜயவீர

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் நாடக அரசியலுக்கு இனிமேலும் எதிர்காலம் இல்லை எனவும், மிகக் குறுகிய காலத்திற்குள் பாரிய ஊழல்களைச் செய்த அரசாங்கம் இதுவே எனவும் சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்தார்.

கொழும்பு ஹென்றி பெத்ரிஸ் மைதானத்தில் நடைபெற்ற சர்வஜன அதிகாரத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்திக்கு உதவும் மிகப்பெரிய செல்வம் அதன் மனித வளமாகும். ஒரு தொழில்முனைவோர் அரசு உழைக்கும் மக்களாலேயே கட்டியெழுப்பப்படுகிறது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இம்முறை மே தினத்தை ஒரு சோகமான பின்னணியிலேயே கொண்டாட வேண்டியுள்ளது. உழைக்கும் மக்களுக்கு எதிராக இவ்வளவு தூரம் அரச அதிகாரத்தைப் பயன்படுத்திய வேறு எந்த அரசாங்கமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஒரு சோகமான சூழலில் மே தினத்தை நினைவுகூருகிறது. நிதியமைச்சை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மில்லியன் கணக்கான டொலர்கள் ஹெக்கர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் பின்னணியில், அதன் உண்மையை வெளிப்படுத்திய அரச அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் உழைக்கும் மக்களைத் துரத்தித் துரத்தித் தாக்கி வருகிறது என அவர் குற்றம் சாட்டினார்.

மின்சார சபை ஊழியர்களை அச்சுறுத்திய விதம் குறித்துப் பேசிய அவர், லெனின், மார்க்ஸ் அல்லது விஜேவீரவின் புகைப்படங்களைப் பயன்படுத்திப் பேரணிகளை நடத்த இவர்களுக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார்.

உண்மையான இடதுசாரி இயக்கம் என்பது மக்களின் இதயத் துடிப்பு என்றும், அந்தத் தூய்மையான அரசியலை இவர்கள் அழித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அநுர குமாரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை. 60,000 இளைஞர்களைப் பலிகொடுத்த கட்சி இது.

அந்த இளைஞர்களுக்கு இவர்கள் பதிலளிக்க வேண்டும். இது அநுர குமாரவின் அரசாங்கம் அல்ல, அநுரவும் ரணிலும் இணைந்து உருவாக்கிய அரசாங்கமே நாட்டை நடத்துகிறது.

இந்தப் புத்தகம் ரணில் விக்கிரமசிங்கவின் உள்ளடக்கத்தைக் கொண்டது, அட்டை மாத்திரமே அநுரவுடையது என அவர் விமர்சித்தார்.

ஒரு வளர்ந்த இலங்கையை உருவாக்கவும், வெளிநாடுகளுக்குச் செல்ல நினைக்கும் இளைஞர்களுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கவும் தாம் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

சர்வஜன அதிகாரம் நிச்சயமாக அதிகாரத்தைக் கைப்பற்றும். தாய்நாட்டின் மீது அன்பு கொண்ட மக்களை நிபந்தனையின்றி ஒன்றிணைப்போம்.

இந்த அரசாங்கத்தையும் அதற்கு முட்டுக்கொடுக்கும் சக்திகளையும் தோற்கடிப்போம் என திலித் ஜயவீர மேலும் தெரிவித்தார்.

an

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்

June 25, 2026

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் காலநிலை மாற்றம் மற்றும் சக்திவள பாதுகாப்பின்மை ஆகிய இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய

ni

நைஜீரியாவில் நள்ளிரவில் பொதுமக்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு ; 20 பேர் பலி

June 25, 2026

நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20

up

மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை விரைவில் நிறைவு செய்ய பணிப்பு

June 25, 2026

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள்

Accident

நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் விபத்து ; 5 பேர் காயம்

June 25, 2026

அனுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, தில்லையடி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற முச்சக்கர வண்டி

madu matha

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்

June 25, 2026

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி. சோசை

3E7VMYH3WZF3XLNWLHPJSZRLEE

ஒரிலியாவில் கடத்தல் மற்றும் கொலை முயற்சி: பிரஹார ரொறன்ரோவைச் சேர்ந்த 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடங்குகிறது!

June 25, 2026

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரிலியா நகரில் உள்ள கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் (Gas station) ஒன்றிற்குள் மிசிசாகாவைச்

Chandra

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை – அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

June 25, 2026

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம்

air canada1555

விமானிக்கு திடீர் மருத்துவ அவசரநிலை: போஸ்டன் நகருக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்ட ‘எயார் கனடா’ விமானம்

June 25, 2026

நியூ ஜெர்சியில் இருந்து ஹாலிஃபாக்ஸ் (Halifax) நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயார் கனடா விமானத்தின் விமானிக்கு (Pilot) திடீரென ஏற்பட்ட

ba

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

June 25, 2026

மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக, நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பாரியதொரு கவனயீர்ப்பு

730211338_1737492697446614_7852674110750856440_n

, ஸ்டோனி கிரீக் தீ வைப்புச் சம்பவம்: சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ஹாமில்டன் போலீஸ்அவசரக் கோரிக்கை

June 25, 2026

ஹாமில்டன் (Hamilton): கனடாவின் ஒன்ராறியோ மாநிலம், கீழ் ஸ்டோனி கிரீக் (Stoney Creek) பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில்

arr

ஐஸ் போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது

June 25, 2026

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வியாபாரி ஒருவர் நேற்று புதன்கிழமை (24)

Harini-amarasooriya

நாட்டின் கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காணுமாறு பணிப்பு

June 25, 2026

கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய