மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி. சோசை அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் நிர்வாகம் ஒழுங்கமைப்பில் சிறப்பாக நடைபெற்றது.

மடு அன்னையின் திருத்தலத்தின் போட்டிக்கோ முன்றலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்பணியாளர்கள், அருட் சகோதர சகோதரிகள், இறைமக்கள் அடங்கலாக இறை வழிபாட்டோடு முதலாவது நவநாள் வழிபாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

முதலாவது நவ நாள் வழிபாட்டின் ஆரம்ப நிகழ்வாக மருதமடு திரு தாயாரின் கொடி மற்றும் பாப்பரசரின் திருக்கொடிகள் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகையினால் இறைவார்த்தை பகிர்வோடு ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றி வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள் திருச்செபமாலைகள் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மொழிகளில் நடாத்தப்பட்டு வழமையின் பிரகாரம் நற்கருணை ஆண்டவரின் பிரசன்னம் எழுந்தேற்றம் செய்யப்பட்டு தமிழ் சிங்கள மொழிகளில் மறையுரைகள் வழங்கப்பட்டன.

மறையுரையினை தொடர்ந்து தேவ அழைத்தலுக்கான ஜெபம் இரு ழொழிகளிலும் பரிந்துரைக்கப்பட்டு இறுதியாக நற்கருணை இறையாசீர் ஆனது இறைமக்களுக்கு வழங்கப்பட்டு இரவு செபத்துடன் முதலாவது நாள் வழிபாடுகள் முடிவுற்றது.

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா ஆண்டுதோறும் ஜூன் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, ஜூலை 2 ஆம் திகதி காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலியுடன் பக்திபூர்வமாக நிறை வடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

wa

கடும் குடிநீர்த் தட்டுப்பாடு

August 24, 2026

த்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட லெகேதியன்கல – தியவர கிராம மக்கள் தற்பொழுது கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டை

jud

ஐவரை பலியெடுத்த விபத்து: இரண்டு சாரதிகளுக்கும் விளக்கமறியல்

August 24, 2026

ஐவரை பலியெடுத்த வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகனங்களின் சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பதுளையிலிருந்து கெம்பிலின்ன பகுதிக்கு

la

யாழ். வயாவிளான் சந்தியில் காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம்!

August 24, 2026

துகாப்புப் படைகள் கையகப்படுத்தியுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி யாழ். வயாவிளான் சந்தியில் மக்கள் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்தில்

pol

கண்டியில் பொலிஸார் மீது தாக்குதல்!

August 24, 2026

கண்டி நகரில் அமைந்துள்ள தலதா மாளிகையின் பிரதான வாசல் பகுதிக்கு அருகில், பெரஹரா கடமையில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 24, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

30

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

August 23, 2026

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப்

j

ஜப்பானின் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 37 பேர் காயம்

August 23, 2026

டோக்கியோவிற்கு வடகிழக்கே உள்ள இபராக்கி மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், குறைந்தபட்சம் 37 பேர்

1376391

“எம்.எல்.ஏ-க்களுக்கு கார் வழங்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்!” – தவெக அரசுக்கு சிபிஐ மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

August 23, 2026

சென்னை சென்னை தியாகராய நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலச் செயலாளர்

images - 2026-08-23T201653.538

“கலைஞராக இருந்தாலும் தோற்கடித்திருப்பேன்!” – மு.க.ஸ்டாலினைச் சாடிய தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு அதிரடி!

August 23, 2026

ன்னை சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் (தவெக) பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு, முதலமைச்சர் விஜய்

hindutamil-prod_2026-07-25_wfbbokby_09c42ddb-771b-4856-8469-a2bd3d39469a

“அறநிலையத்துறை செயல்பாடுகளைச் சேகர்பாபு வேவு பார்ப்பது ஏன்?” – அமைச்சர் ரமேஷ் சரமாரி கேள்வி!

August 23, 2026

திருச்சி திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது அடுக்கடுக்கான

phototune.ai_1787481855

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: சர்வதேச பொறிமுறையை நோக்கியே போராட்டத்தை நகர்த்துகிறோம் – செல்வராணி!

August 23, 2026

போராட்டத்தை இலங்கை அரசாங்கம் தங்களது உள்நாட்டு பொறிமுறைக்குள் எங்களைத் தள்ளப் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள். தள்ளுவதற்கு பல முயற்சிகளில் பல முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

a.

பலாலி மக்கள் 10ஆவது வாரமாகவும் போராட்டம்

August 23, 2026

பலாலி மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவப் பிடியிலிருந்து விடுவித்து, தமது இயல்பு வாழ்வை மீள உறுதிப்படுத்துமாறு கோரி, நிலமிழந்த பலாலி