பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை – அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,

“கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை, அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.

எனினும், உழவு இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி, கடல்வளத்தை அழிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் மீன்பிடி நடைமுறைகளே தடை செய்யப்பட்டுள்ளன.

எவ்வித அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் இன்றி, தமக்குத் தேவையான விதத்தில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடந்த காலங்களில் துறைசார் அமைச்சர்கள் அனுமதி வழங்கியமையாலேயே கரைவலை மீன்பிடித் தொழிலில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டன.

அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே கரைவலை மீன்பிடித் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

முதலில் நாம் இரு மாதங்கள் அவகாசம் கோரினோம். ஆனால், அந்த கால எல்லை போதாது என்பதால், அறிவியல் பூர்வமான தீர்வை வழங்குவதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரியிருந்தோம். மீனவர்களும் இதற்குச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடல் வளங்களை நாசமாக்க இடமளிக்க முடியாது. சட்டவிரோத நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது. நாம் கடற்றொழிலாளர்களை ஒருபோதும் கைவிடமாட்டோம்.

பாரம்பரியமான முறையில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடலாம், அதற்குரிய புதிய முறைமை உருவாக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம்.

நாம் கால அவகாசம் கோரியுள்ள விடயத்தை வைத்து, அரசியல் நடத்தி மீனவர்களைக் குழப்புவதற்கு எதிர்க்கட்சியினர் முற்படக் கூடாது.

அதேவேளை, இந்திய மீனவர் பிரச்சினை என்பது நீண்ட நாள் பிரச்சினையாகும். இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தற்போது எல்லைத் தாண்டல்கள் குறைவடைந்துள்ளன” என தெரிவித்தார்.

an

உலகளாவிய நெருக்கடிகளை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகள் தேவை – ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம்

June 25, 2026

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டெரஸ் காலநிலை மாற்றம் மற்றும் சக்திவள பாதுகாப்பின்மை ஆகிய இரண்டு ஒன்றோடொன்று தொடர்புடைய

ni

நைஜீரியாவில் நள்ளிரவில் பொதுமக்கள் மீது மர்ம கும்பல் துப்பாக்கிச் சூடு ; 20 பேர் பலி

June 25, 2026

நைஜீரியாவில் பொக்கோஸ் நகரில் உள்ள காவெல் கிராமத்தில் நள்ளிரவில் மர்ம கும்பலால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20

up

மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகளை விரைவில் நிறைவு செய்ய பணிப்பு

June 25, 2026

இந்திய உதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்டு வரும் 4,700 வீடுகளை உள்ளடக்கிய வீடமைப்பு திட்டத்தை, இந்த ஆண்டின் இறுதிக்குள்

Accident

நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் விபத்து ; 5 பேர் காயம்

June 25, 2026

அனுராதபுரத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று, தில்லையடி பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற முச்சக்கர வண்டி

madu matha

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழா ஆரம்பம்

June 25, 2026

மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திரு விழாவிற்கான கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி. சோசை

3E7VMYH3WZF3XLNWLHPJSZRLEE

ஒரிலியாவில் கடத்தல் மற்றும் கொலை முயற்சி: பிரஹார ரொறன்ரோவைச் சேர்ந்த 5 பேர் மீதான வழக்கு விசாரணை தொடங்குகிறது!

June 25, 2026

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரிலியா நகரில் உள்ள கைவிடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையம் (Gas station) ஒன்றிற்குள் மிசிசாகாவைச்

Chandra

பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை – அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர்

June 25, 2026

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம்

air canada1555

விமானிக்கு திடீர் மருத்துவ அவசரநிலை: போஸ்டன் நகருக்கு அவசரமாகத் திருப்பிவிடப்பட்ட ‘எயார் கனடா’ விமானம்

June 25, 2026

நியூ ஜெர்சியில் இருந்து ஹாலிஃபாக்ஸ் (Halifax) நோக்கிப் பறந்து கொண்டிருந்த எயார் கனடா விமானத்தின் விமானிக்கு (Pilot) திடீரென ஏற்பட்ட

ba

நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

June 25, 2026

மட்டக்களப்பு, காந்தி பூங்காவிற்கு முன்பாக, நெல் கொள்வனவு மற்றும் விலையை அதிகரிக்கக் கோரி மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து பாரியதொரு கவனயீர்ப்பு

730211338_1737492697446614_7852674110750856440_n

, ஸ்டோனி கிரீக் தீ வைப்புச் சம்பவம்: சந்தேக நபரின் புதிய புகைப்படத்தை வெளியிட்டு ஹாமில்டன் போலீஸ்அவசரக் கோரிக்கை

June 25, 2026

ஹாமில்டன் (Hamilton): கனடாவின் ஒன்ராறியோ மாநிலம், கீழ் ஸ்டோனி கிரீக் (Stoney Creek) பகுதியில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில்

arr

ஐஸ் போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது

June 25, 2026

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தக்வா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் வியாபாரி ஒருவர் நேற்று புதன்கிழமை (24)

Harini-amarasooriya

நாட்டின் கல்வித் துறையிலுள்ள பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைக் காணுமாறு பணிப்பு

June 25, 2026

கல்வித் துறை சார்ந்த தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான விரைவான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய