மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை குறித்த முக்கிய தகவல்

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதி பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் குறித்த 1,572 ஏக்கர் காணி தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு வன இலாகா திணைக்களத்திற்கு அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி பணிப்புரை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் அமைச்சருமான சுனில் ஹெந்துநெத்தி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் திட்டமிடல் கூட்டம் நேற்று (26) மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில், அமைச்சர் சுனில் ஹெந்துநெத்தி தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, 2026ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பல்வேறு வழிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி மற்றும் அந்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் நவனீதன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளின் செயலாளர்கள், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், கிழக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

புனரமைப்புகள்,வீட்டுதிட்டங்கள்,மீள்குடியேற்றங்கள்,விவசாய துறை,யானைகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக மயிலத்தமடு, மாதவனைப் பகுதியிலுள்ள பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, மகாவலி அதிகாரசபையால் அடையாளப்படுத்தப்பட்டு எல்லை குறிக்கப்பட்டுள்ள 1,572 ஏக்கர் காணியை வன இலாகா திணைக்களத்திலிருந்து விடுவித்து (‘டி-கெசட்’ செய்து) சட்டப்பூர்வமாக்குவது தொடர்பில் தமது நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் தெளிவுபடுத்துமாறு வனஇலாகாவிற்கு அமைச்சரினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வெளிமாவட்டங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லாமல் உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுக்கத் இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் குறைந்தபட்சம் ஒரு அரச-தனியார் பங்காளித்துவ முதலீட்டுத் திட்ட யோசனையையாவது முன்வைக்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நவீன விவசாயம், மீன்பிடி மற்றும் கைத்தொழில் முதலீடுகளை மாவட்டத்திற்குள் கொண்டு வருவதற்காகத் தேவையான காணிகள் விடுவிக்கப்படும் எனவும் இதன்போது அமைச்சரினால் உறுதியளிக்கப்பட்டது.

photo-collage.png (4)

சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள்

November 27, 2026

சிட்னியில் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய அரசியல்வாதி நாஞ்சில் சம்பத்

5L7TVPAVO4R2NAAVMPW3TVLMXY

கியூபெக்கின் மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிரான வழக்கில் கனடா உச்ச நீதிமன்றம் இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்குகிறது

November 27, 2026

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பற்ற சட்டத்தின் (Bill 21) அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை குறித்து கனடா உச்ச நீதிமன்றம்

Suresh Salley Arrested-828580 (1)

முன்னாள் உளவுத்துறைப் பணிப்பாளர் சுரேஸ் சாலேவின் பிரெஞ்சுத் தொடர்புகள் மற்றும் பல கடவுச்சீட்டுகள் குறித்து சி.ஐ.டி தீவிர விசாரணை

November 27, 2026

இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் சுரேஸ் சாலே, பிரெஞ்சு பயண ஆவணம் உட்படப் பல கடவுச்சீட்டுகளைப்

Arun Hemachandra

குக் தீவுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர நியூசிலாந்தின் தலையீட்டை இலங்கை கோரியுள்ளது

November 27, 2026

குக் தீவுகளில் (Cook Islands) சிக்கித் தவிக்கும் இலங்கைப் பெண்ணொருவரைப் பாதுகாப்பாகவும், அவரது சுயவிருப்பத்தின் பேரிலும் மீண்டும் நாட்டிற்கு அழைத்து

14 - 11 - 2025-863649

ரஷ்ய எதிர்ப்புத் தடைகளில் இணைய மறுத்த இலங்கையின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா பாராட்டு

November 27, 2026

ரஷ்ய எதிர்ப்புப் பொருளாதாரத் தடைகளில் இணைந்து கொள்ளாமல் இலங்கை பின்பற்றி வரும் கொள்கை ரீதியான மற்றும் நிலையான நிலைப்பாட்டிற்கு ரஷ்யா

amnesty

போர் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும்–சர்வதேச மன்னிப்புச் சபை

November 27, 2026

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு ஆயுதப் போராட்டத்தின் போது மனிதாபிமான உதவிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின்

photo-collage.png (3)

யாழ். பல்கலை உட்பட நாட்டின் பல பகுதிகளில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 27, 2026

மாவீரர் தினத்தை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு பகுதியில் வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடி முழுமையான கதவடைப்பை மேற்கொண்டு இன்றையதினம்

fr

Airbus ஊழல் வழக்கு: பிரான்ஸ் நிபுணர் சாட்சியமளிக்க இலங்கை வருகின்றார்

November 27, 2026

உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற Airbus விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பான விசாரணைகளில் முக்கிய பங்காற்றிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தடயவியல்

mou

சபையில் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலி

November 27, 2026

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் (27.11.2026) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி இலங்கையைத்

Untitled

மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நிலப்பிரச்சினை குறித்த முக்கிய தகவல்

November 27, 2026

மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதி பண்ணையாளர்களின் மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் குறித்த 1,572 ஏக்கர்

Arrest_1

வல்வெட்டித்துறையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற இளைஞர் கைது!

November 27, 2026

வல்வெட்டித்துறையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வின்போது, அனுமதியின்றி

niha

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளை நினைவுகூரும் வகையில் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டாம் – ஆளும் கட்சி

November 27, 2026

போரில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் கலந்துகொள்வது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தனது நிலைப்பாட்டை