மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு ரவிகரன் பணிப்பு

மந்தகதியில் இடம்பெறும் நித்தகைக் குளத்தின் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் கமக்கார அமைப்பினர் ஆகியோரால் நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்பட்டு, குளத்தினை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவுமாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் உறுதியளித்துள்ளார்.

நித்தகைக்குளத்தின் சீரமைப்புப் பணிகள் தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் நித்தகைக்குளம் விவசாயிகள் ஆகியோருக்கிடையில் வியாழக்கிழமை (30) நித்தகைக்குளம் பகுதியில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே இவ்வாறு நீர்ப்பாசனப் பொறியியலாளரால் பதிலளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு நித்தகைக்குளம் மற்றும், குளத்தின் கீழான 1500ஏக்கர் வயல்நிலங்கள் என்பவற்றை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்திருந்தது.

இத்தகையசூழலில் அப்பகுதி விவசாயிகள் மற்றும், வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோருடைய தொடர்ச்சியான வலியுறுத்தலையடுத்து குறித்த குளம் வனவளத்திணைக்களத்தால் விடுவிக்கப்பட்டதுடன், குளத்தின் கீழான வயல்நிலங்களும் வனவளத் திணைக்களத்தால் விடுவிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் அப்பகுதி விவசாயிகளின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக கடந்த 2025ஆம் ஆண்டு நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகளுக்கென நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, குளத்தின் சீரமைப்புவேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்நிலையில் எதிர்வரும் 30.06.2026 ஆம் திகதியுடன் முடிவுறுத்தப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்படும் என்ற ஒப்பந்தத்துடன் தொடங்கப்பட்ட நித்தகைக்குளத்தின் சீரமைப்பு வேலைகள் மந்தகதியில் இடம்பெற்றுவருவதுடன், வினைத்திறனற்றவகையில் சீரமைப்புப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக விவசாயிகளால் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டினையடுத்து கடந்த 02.04.2026அன்று நித்தகைக் குளம் பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கு இடம்பெறும் சீரமைப்புப்பணிகள் தொடர்பில் பார்வையிட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து நித்தகைக்குளத்தின் சீரமைப்புப்பணிகள் மந்தகதியிலும், வினைத்திறனற்ற வகையிலும் இடம்பெறுகின்றமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் மற்றும் முல்லைத்தீவு மாவட்டசெயலாளர் ஆகிய தரப்பினருக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் நித்தகைக்குளத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகளை ஆராய்வதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய 30.04.2026இன்று நித்தகைக்குளம் பகுதிக்கு நேரடியாகச் சென்று, அங்கு இடம்பெறும் சீரமைப்புப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தது.

இதன்போது மந்தகதியில் சீரமைப்புப்பணிகள் இடம்பெறுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மற்றும் விவசாயிகளால் இதன்போது நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதன்போது பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பதிலளிக்கையில்,

இதுவரை 40வீதமான அபிவிருத்தி வேலைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 30.06.2026ஆம் திகதிக்குள் வேலைகள் பூர்த்திசெய்யப்பட்டு விவசாயிகளுக்காக குறித்த குளம் கையளிக்கப்படுமென ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா பேரனர்த்த காலத்தில் அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்ளமுடியாதமையினால் உரியகாலத்திற்குள் குளத்தின் சீரமைப்பு வேலைகளை முடிவுறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் குளத்தின் சீரமைப்பு வேலைகளை முழுமைப்படுத்தி விவசாயிகளிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும் என்றார்.

அத்தோடு குறித்த குளத்தின் அபிவிருத்தி வேலை தொடர்பான திட்ட வரைபடம் மற்றும் தமிழ் மொழியிலான திட்டவரைபு என்பவற்றை தாம் ஒருவருடத்திற்கு முன்னரே நீர்ப்பாசனத் திணைக்களத்திடம் கோரியிருந்தபோதும் இதுவரை கையளிக்கப்படவில்லை என விவசாயிகளால் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் 06ஆம் திகதிக்கிடையில் தமிழ்மொழிமூலமான திட்ட வரைபு மற்றும் வரைபடம் என்பவற்றை தாம் விவசாயிகளிடம் கையளிப்பதாக முத்துஐயன்கட்டு பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30.06.2026ஆம் திகதிக்குள் இந்தக்குளத்தினுடைய அபிவிருத்தி வேலைகளை முடிவுறுத்துவதாக ஒப்பந்தம்செய்யப்பட்டு, ஒப்பந்ததாரர்களால் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் உரிய திகதியில் வேலைகளை நிறைவுசெய்து குளத்தினை விவசாயிகளிடம் கையளிப்பதற்கான சூழல் இங்கு இல்லை.

இத்தகைய சூழலில் ஒக்டோபர் மாதத்திற்குள் அபிவிருத்தி வேலைகளை முடிவிற்கு கொண்டுவந்து விவசாயிகளிடம் குளத்தினை கையளிப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எம்மிடம் உறுதியளித்துள்ளனர்.

இவ்வாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக அபிவிருத்தி வேலைகள் முடிவுறுத்தப்பாடாதுவிட்டால், விவசாயிகள் வழக்குத் தொடர்வதள்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

அத்தோடு இந்த விடயம் தொடர்பில் எம்மாலும் உரிய அமைச்சு மட்டங்களுக்கும் கொண்டுசெல்லப்படுவதுடன், பாராளுமன்றிலும் இந்த விடயம் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் என்றார்.

canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக