தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையான கோமலீ பிரசாத் கதையின் நாயகியாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘மண்ட வெட்டி’ திரைப்படத்தில் இடம்பெறும் ‘ராட்சசியே..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குவர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்ட வெட்டி’ திரைப்படத்தில் கோமலீ பிரசாத், சுபத்ரா ராபர்ட், அமிர்தா, தேனப்பன், கஜராஜ், பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் எஸ். மணிதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு தீபக் வேணுகோபால் இசையமைத்திருக்கிறார்.
மித்தலாஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சரண்ராஜ் செந்தில் குமார் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி இருக்கும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ராட்சசியே ராப் பசி ஏனோ..’ எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் தமிழ் மணி எழுத, பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி மற்றும் பின்னணி பாடகர் தீபக் வேணுகோபால் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.
ஆன்மீக உணர்வையும், புதிரான உலகத்தை காண்பதற்காகவும் பயணிக்கும் ஒரு ஆதரவற்ற பெண்ணின் பயணத்தின் பின்னணியில் ஒலிக்கும் இந்தப் பாடல் கதை சூழலை விவரிக்கும் பாடலாக இடம் பிடித்திருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இந்த பாடல், இசை, வரிகள் -ஆகியவை அதிகரிக்க செய்திருக்கிறது.