மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திக்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று (11) மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் கலந்துகொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய கணக்காளர் பி.சுகீஸ்வரன், வலயத்தின் உதவி கல்வி பணிப்பாளர் த.கோகுலகுமாரன், உடற்கல்வி உதவி பணிப்பாளர் வி.லவகுமார், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம். புதிய கல்வி சீரமைப்பினை ஆரம்பித்திருக்கின்றோம்.தரம் ஒன்றிலும் தரம் ஆறிலும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம். இருந்தபோதிலும் தரம் ஆறின் பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

கடந்த காலத்தில் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே அதிகளவான நிதிகளை அக்காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் ஒதுக்கிவந்தார்கள். ஆனால் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாகாணசபைகள் ஊடாக 350 மில்லியன் ரூபாவும் மத்திய அரசாங்கம் ஊடாக 179 மில்லியன் ரூபாக்களும் மொத்தமாக 529 மில்லியன் ரூபாவினை நாங்கள் கல்விக்காக ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.

கட்டிடங்களை திருத்துவதற்காகவும் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்வதற்காகவும் இந்த நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.இன்னும் பல வேலைத்திட்டங்களை கல்வி அபிவிருத்திக்காக செயற்படுத்தவுள்ளோம்.

கல்வி என்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு சுமையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. இம்முறையிலே மாற்றத்தினை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றோம்.

பிரதமர் ஒரு பெண்ணாக இருந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வருகின்றார். இந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் பெண்களுக்கு முக்கியம் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்தியில் பெண்கள் ஒரு பங்காளராக உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். பெண்களுக்கான சந்தர்ப்பத்தினையும் வாய்ப்புகளையும் வழங்கி பெண்களை வலுவூட்டுவதற்கான பல விடயங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

பெண்களை பாதுகாக்கின்ற அரசாங்கமாகவும் கல்விக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது என தெரிவித்தார்.

maveerar thuyulum illam

சாட்டி மாவீரர் துயிலும் இல்ல காணி விவகாரம்! பொலிஸாரின் தடை கோரும் மனுவில் சட்டத்தரணிகள் ஆட்சேபனை – வழக்கு நவம்பர் 20ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

November 18, 2026

சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியின் உரிமையாளர்கள், குறித்த காணியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதிக்கக்

jud

சட்ட விரோதப் பணத்தில் வாங்கப்பட்ட ரூ. 40 மில்லியன் சொத்துகள் முடக்கம்!

November 18, 2026

போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும், தங்காலையைச் சேர்ந்த ‘லாரா’ என்றழைக்கப்படும் இந்திக பிரசாத் என்பவருக்குச்

kasya

மன்னிப்புக் கோரிய காஸ்ஸப தேரருக்குப் பிணை

November 18, 2026

திருகோணமலை, ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரை வளாகத்தில் குடியிருப்பு (குடில்) ஒன்றை அமைத்து புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்த

sd

வெவ்வேறு விபத்துகளில் இரு நண்பர்கள் ஒரே நாளில் மரணம்!

November 18, 2026

குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்த நண்பர்கள் இருவரும், யட்டவத்தை பகுதியில் இடம்பெற்ற

En

முதல் தோல்வியை ஸ்பெய்னுக்கு இங்கிலாந்து பரிசளித்தது!

November 18, 2026

தொடர்ந்து 43 போட்டிகளாக தோற்காத ஸ்பெய்னுக்கு முதல் தோல்வியை இங்கிலாந்து பரிசளித்துள்ளது. ஸ்பெய்னில் நடைபெற்ற அவ்ணியுடனான தேசங்களுக்கான லீக்கின் ஏ3

a re

நாமல் ராஜபக்ஷ இப்படியே நிரந்தரமாகச் சிறையில் அடைக்கப்படுவார் – அர்ச்சுனா M.P

November 18, 2026

இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக 1987 மற்றும் 1988 ஆம் ஆண்டுகளில் கலவரங்களைச் செய்த ஜே.வி.பி. (JVP) தரப்பினர்,

gas

எரிவாயு தேவையை சீராக பூர்த்திசெய்ய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

November 18, 2026

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நிலவக்கூடிய எரிவாயு தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில், லிட்ரோ கேஸ் நிறுவனம் 45,000 மெட்ரிக்

o

ஆசிரியர் – அதிபர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து கலந்துரையாடல்

November 18, 2026

ஆசிரியர் சேவையிலிருந்து அதிபர் சேவைக்குப் பதவியுயர்வு பெறும் போது ஏற்படும் ஊதிய முரண்பாடுகள் தொடர்பில், கல்வி, மனிதவளம் மற்றும் மனித

death

கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு!

November 18, 2026

யாழ்ப்பாணம் – வடமராட்சி, பொலிகண்டி மேற்கு கடற்கரைப் பகுதியில் 81 வயதுடைய முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில்

MediaFile_20261118_004208_067

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கும் கடும் எச்சரிக்கை

November 18, 2026

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள “அக்வான்” (Akvan) சூறாவளியானது,

X5AARUHG3NG3TE5MOUZFFUYZZE

அமெரிக்காவுக்கு எதிராகச் சீனாவைப் பயன்படுத்துகிறீர்களா? — கனடா பிரதமருக்கு டிரம்பின் வர்த்தக ஆலோசகர் கடும் எச்சரிக்கை

November 17, 2026

சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுடன் வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி வெளியிட்ட கருத்துகளுக்கு, அமெரிக்க

canada china

கனடா – சீனா புதிய வர்த்தக மற்றும் கலாச்சார ஒப்பந்தங்கள்: 400 மில்லியன் டாலர் ஏற்றுமதிக்கு வரி விலக்கு

November 17, 2026

சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி,