வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 5 இளைஞர்களிடம் இருந்து1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.