இலங்கை அதன் எல்லைக்கு வெளியேயிருந்து வரும் அதிர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
நாடு எதிர்பாராத சர்வதேச நிகழ்வுகளால் சோதிக்கப்படுகின்றது,குறிப்பாக மத்திய கிழக்கில் காணப்படும் சூழ்நிலையால்,மத்திய கிழக்கில் தற்போது காணப்படும் சூழல் எரிசக்தி செலவுகள் மற்றும் அந்நிய செலாவணி தேவைகள் மீது கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டது,இந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திற்குள்ளேயே அந்த 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுவிட்டோம்.
இதேநிலை தொடர்ந்தால் எண்ணெய் இறக்குமதிக்கா இந்த வருடம் 6 பில்லியன் டொலர்களை செலவிடவேண்டிய நிலையேற்படலாம்.இது நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு மீது அழுத்தத்தை செலுத்தும் மேலும் டொலரின் தேவை அதிகரிக்கலாம்.
பொருளாதார ஸ்தி;ரதன்மையை பாதுகாக்கும் அதேவேளையில் டொலர் மீதான அழுத்தத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற சவாலை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்கின்றனர்.
இலங்கையால் உள்நாட்டு அதிர்ச்சியை சமாளிக்க முடியும் ஆனால் நாடு அந்நிய செலாவணியை நம்பியிருப்பதால் எல்லைக்கு வெளியேயிருந்துவரும் அதிர்ச்சிகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இலங்கை உள்ளது.
இலங்கையின் எல்லைக்கு வெளியேயிருந்து வரும் அதிர்ச்சிகள் சுற்றுலாத்துறை,வெளிநாடுகளில் வேலைபார்க்கும் இலங்கையர்கள் அனுப்பக்கூடிய பணம், எரிபொருள் செலவு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் போன்றவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.