இன்று (20) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கோப்பை பால் தேநீரின் (Milk Tea) விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் மதுபானசாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடை உரிமையாளர்கள் எதிர்கொண்டு வரும் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் அதிகரித்துச் செல்வதைக் கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் இன்று முதல் பால் தேநீரை அதிகரித்த விலையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, ஏனைய உணவுப் பொருட்கள் மற்றும் பானங்களின் திருத்தப்பட்ட விலைகள் குறித்த மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.