பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

சென்னை:
ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகளின் விவரம்:

இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்

தமிழ்த் திரையுலகைப் படப்பிடிப்புக் கூடங்களிலிருந்து கிராமியச் சூழலுக்கு நகர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வியலைத் திரைப்படங்களாக உருவாக்கிய இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு ரூ.2.50 கோடியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும்.

அரசு மைய அச்சகத்திற்கு நவீன வசதிகள்

  • தானியங்கி காகிதம் வெட்டும் இயந்திரம்: பணியிட விபத்துகளைத் தவிர்த்துப் பணியாளர் நலன் காக்க, சென்னை அரசு மைய அச்சகத்திற்கு ரூ.86 லட்சம் செலவில் நிரலாக்க தானியங்கி காகிதம் வெட்டும் இயந்திரம் நிறுவப்படும்.
  • நவீன உபகரணங்கள்: மேலான தொழில்நுட்பங்களுடன் அரசு அச்சகங்களை நவீனப்படுத்திட நுட்பமான Baking இயந்திரங்கள், Automatic Pasting and Strapping இயந்திரம் மற்றும் Numbering இயந்திரங்கள் ரூ.14.3 லட்சத்தில் கொள்முதல் செய்யப்படும்.
  • காகிதக் கிடங்கு மற்றும் பண்டக சாலை: சென்னை அரசு மைய அச்சகத்தில் நவீன மற்றும் பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய காகிதக் கிடங்கு மற்றும் பொதுப் பண்டக சாலை ஆகியவை 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ரூ.7.3 கோடியில் கட்டப்படும்.
  • ஒருங்கிணைந்த அச்சு மேலாண்மைத் திட்டம்: எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் அச்சிடத் தேவையான மூலப்பொருட்கள் கொள்முதல், அச்சுப்பணிகள், விநியோகம், அச்சு இயந்திரப் பராமரிப்பு, கழித்தொதுக்கம் உள்ளிட்ட பணிகளைச் சீராக மேற்கொள்ள ஏதுவாக ‘ஒருங்கிணைந்த அச்சு மேலாண்மைத் திட்டம்’ (Comprehensive Printing Management System) செயல்படுத்தப்படும்.

5 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை

கவிஞர் கே.ஜீவபாரதி, பேராசிரியர் ராஜ் கௌதமன், சாரணபாஸ்கரன் (எ) டி.எம்.எம்.அகமது, சா.கந்தசாமி, டி.எம்.பீர் முகம்மது ஆகிய 5 தமிழறிஞர்களின் அருந்தமிழ் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தேசிய, பன்னாட்டுக் கருத்தரங்கங்கள்

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐந்து புலங்களில் பயிலும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள் சமகால மற்றும் வளர்ந்து வரும் ஆராய்ச்சிப் போக்குகளுக்கு ஏற்பத் தொடர்ந்து சிறப்பாகத் தங்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஆண்டுதோறும் தேசிய மற்றும் பன்னாட்டுக் கருத்தரங்கங்கள் நடத்தப்படும். இதற்கென ஒரு புலத்திற்கு ரூ.3 லட்சம் வீதம் ஐந்து புலங்களுக்கு மொத்தம் ரூ.15 லட்சம் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

செய்தித்துறை மற்றும் திரைப்படப் பயிற்சி நிறுவன மேம்பாடுகள்

  • கேமராக்கள் கொள்முதல்: மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகப் பயன்பாட்டிற்காக ரூ.3 கோடியில் 41 கேமராக்கள் கொள்முதல் செய்யப்படும்.
  • கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV): தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) பொருத்தப்படும்.
#Bharathiraja #Theni #MinisterRajmohan #TamilDevelopment #InformationDepartment #TamilCinema #DirectorBharathiraja #TamilNaduNews #ChennaiNews #PressModernization #BookNationalization #TamilUniversity #Thanjavur #MGRFilmInstitute #CCTVCamera #TamilScholars #PrintingDepartment #TNGovtSchemes #TamilNews #LatestNewsTN
canada11

எங்களால் தொழிலை நடத்த முடியவில்லை’: அமெரிக்க வரி- கனடிய நிறுவனங்கள் கவலை

August 25, 2026

னடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, புதிய அமெரிக்க இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்துள்ளதால், கனடிய

f066efba-3700-4f05-b1b4-98f7f0f69090

வரிகளால் ‘பாதிப்பு ஏற்படும்’, ஆனால் டொராண்டோ மீண்டுவரும்: மேயர் ஆலிவியா சௌ தெரிவிப்பு

August 25, 2026

கனடா மீது விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகள் “பாதிப்பை ஏற்படுத்தும்” என்று டொராண்டோ மேயர் ஆலிவியா சௌ (Olivia Chow) தெரிவித்துள்ளார்,

us canada

அமெரிக்காவிற்கு எதிராக கனடா செவ்வாய்க்கிழமை பதிலடி வரிகளை அறிவிக்கவுள்ளது

August 25, 2026

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் 50 சதவீத இறக்குமதி வரிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவிற்கு எதிராக கனடா தனது

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக