பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் 2026/27க்கான ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர்களுக்கான பட்டியலிலிருந்து மொஹமட் றிஸ்வான், ஷண் மசூட், சைம் அயூப், அப்துல்லா ஷஃபிக், மொஹமட் ஹரிஸ், ஹஸன் அலி, மொஹமட் நவாஸ், நொமன் அலி, ஹுஸைன் தலாட், குராம் ஷெஷாட், மொஹமட் வாஸிம் ஜூனியர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
பாபர் அஸாம், சல்மான் அக்ஹா ஆகியோர் டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான ஒப்பந்தங்களில் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர்.
ஷகீன் ஷா அஃப்ரிடி, ஹரிஸ் றாஃப், பஹீம் அஷ்ரஃப், பக்கர் ஸமன், அரஃபாத் மின்ஹாஸ், அப்ரார் அஹ்மட் ஆகியோர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான, இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ளனர்.
ஷடாப் கான், ஹஸன் நவாஸ், நசீம் ஷா, சல்மான் மிர்ஸா, சஹிப்ஸடா பர்ஹான், மாஸ் ஸடகாட் ஆகியோர் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான ஒப்பந்தங்களில் மாத்திரம் இடம்பெற்றுள்ளனர்.