பலத்த எதிர்பார்ப்புகளோடு இந்தியா – பாகிஸ்தான் போட்டி!

ந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை பார்வையிட செல்லும் ரசிகர்கள் சில பொருட்களை எடுத்து செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பேச்சாளர் எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், போட்டி இடம்பெறும் போது பாதுகாப்பு கடமைகளுக்காக 2,000 பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், 600 போக்குவரத்து பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுவதுடன், உடல் மற்றும் வாகனப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலைத் தவிர்க்க மைதானத்தின் அனைத்து வாயில்களும் போட்டி ஆரம்பமாவதற்கு 5 மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே பிற்பகல் 2 மணிக்கு திறக்கப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் போத்தல்கள், பெரிய பயணப் பைகள், தலைக்கவசங்கள், ஜாக்கெட்டுகள், மதுபானம், இசைக்கருவிகள் மற்றும் ட்ரோன் கருவிகள் ஆகியவற்றை கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து நுழைவுச்சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதால், நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் மைதானத்தைச் சுற்றிக் கூடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிரிக்கெட் சபையின் விசேட அனுமதிப்பத்திரம் இல்லாத வாகனங்கள் கெத்தாராம வீதிச் சந்தி மற்றும் வில்சன் பெரேரா வீதி ஊடாக நுழைய அனுமதி இல்லை.

மைதான வளாகம், சதொச வாகனத் தரிப்பிடம், செபஸ்தியன் கால்வாய் வீதி (1 ஆவது மற்றும் 2 ஆவது பாலங்களுக்கு இடையில்), கோவில் வீதி மற்றும் அப்பிள்வத்தை தரிப்பிடங்கள், 100 அடி வீதியின் இருபுறமும் வாகனங்களை தரித்து நிறுத்த முடியும்.

வின்சென்ட் பெரேரா மாவத்தை, கிராண்ட்பாஸ் வீதி, பாபா புள்ளே பாலம் பகுதி, மல்வத்தை பாலம் மற்றும் மாளிகாவத்தை ஒழுங்கை உள்ளிட்ட மைதானத்திற்கு அருகாமையிலுள்ள பல வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் அல்லது தடைசெய்யப்படும். அனைத்து ரசிகர்களும் மிகவும் பொறுமையுடனும், ஒருவருக்கொருவர் மதிப்பளித்தும் இந்தப் போட்டியைக் கண்டு களிக்க வேண்டும்.

அநாகரிகமாகவோ அல்லது மதுபோதையில் கலகம் விளைவிப்போர் மீதோ கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பாதுகாப்புத் தரப்பு எச்சரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.