நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட கட்டிடம்

தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட “ஹெல பொஜூன்” தேசிய உணவகம் ஒன்று, தற்போது மீண்டும் புனரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது, சுற்றுலா துறையின் முன்னேற்றத்தையும், பிரதேச மக்களின் பொருளாதார நலனையும் மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த தேசிய உணவகம், 2022 ஆம் ஆண்டு தலவாக்கலை நகரசபைத் தலைவர் பாரதி தாசனின் வேண்டுகோளுக்கமைய, முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 60 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

எனினும், ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட நிர்வாக மற்றும் உரிமைச் சிக்கல்களால், இந்த கட்டிடம் கடந்த நான்கு ஆண்டுகளாக பயன்பாடின்றி கைவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பாக தற்போதைய லிந்துலை – தலவாக்கலை நகரசபைத் தலைவர் உபாலி லியனகே விளக்கமளிக்கையில், குறித்த காணி நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கட்டுப்பாட்டிலிருந்து, கொத்மலை மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் கீழ் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமானதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால், ஆரம்பத்தில் திட்டத்தை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

எனினும், தற்போது கழிவுகளை முறையாக அகற்றுதல், கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு எந்தவித சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாத வகையில் தேவையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதைத் தொடர்ந்து உணவகத்தை முழுமையாக புனரமைத்து, விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல பொஜூன் தேசிய உணவகமாக மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர மேலும் 1 கோடி ரூபா தேவை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

பொது மக்களின் வரிப்பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வாறான அரச கட்டிடங்கள் நீண்டகாலம் பயன்பாடின்றி கைவிடப்படுவது அரச வளங்களின் வீணடிப்பாகும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, இந்த திட்டம் மீண்டும் செயற்பாட்டுக்கு வந்தால், உள்ளூர் விவசாயிகள் மற்றும் சுயதொழில் முனைவோருக்கு சந்தை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கும் தரமான பாரம்பரிய உணவுகளை வழங்கும் மையமாக இது உருவாகும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகின்றது.

எது எவ்வாறாயினும், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்கள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, மக்கள் நலனுக்காக முழுமையாக பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் முக்கிய பொறுப்பாகும் என்பதே மக்களின் எதிர்ப்பார்ப்பாகவுள்ளது.

8

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு ‘சிக்கல்’ – லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

July 27, 2026

சென்னை: கடந்த 2015-2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராகப் பதவி வகித்த வைத்திலிங்கம், அடுக்குமாடி வீடு

55OGDDGBRNDMDLRPGLCJT6AH5Q

கேப் பிரெட்டன் (Cape Breton) தீ விபத்து நடந்த இடத்தில் சடலம் மீட்பு; காவல்துறையினர் தீவிர விசாரணை

July 27, 2026

மெக்ஆடம்ஸ் ஏரி பகுதியில் நடந்த உயிரிழப்பை ஏற்படுத்திய தீ விபத்து குறித்து கேப் பிரெட்டன் பிராந்திய போலீசார் விசாரணை நடத்தி

7

அடையாளம் தெரியாத நபர் தொல்லை: மேயர் பிரியா பரபரப்பு புகார்!

July 27, 2026

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் பிரியா, தனக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்ஆப் மூலம்

6

ஆட்சிக்கு வந்த இரண்டரை மாதங்களில் ரூ.20,881 கோடி கடன்- தவெக அரசை விளாசிய கீதாஜீவன்!

July 27, 2026

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் திமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்

ED5JQPYN5NF6XDCAHMETPYHFMM

காணாமல் போன 23 வயது டொராண்டோ பெண்ணைத் தேட கட்டளை மையம் (Command Post) அமைப்பு

July 27, 2026

டிக்சன் மற்றும் மார்ட்டின் குரோவ் வீதிகளுக்கு அருகே கடைசியாகக் காணப்பட்ட 23 வயது பெண்ணை டொராண்டோ போலீசார் தேடி வருகின்றனர்.

AAFNGBSIVY7P5CLUU3MZCILP4M

ஆஜாக்ஸ் பூங்காவில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியில் காரை ஓட்டிச் சென்றதாக நபர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு

July 27, 2026

இம்மாத தொடக்கத்தில், ஆஜாக்ஸ் (Ajax) பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் சிறுவர்கள் நிறைந்திருந்த விளையாட்டுப் பகுதியிலும் நடைபாதைகளிலும் காரை ஆபத்தான முறையில்

XUP2KI6NKFC6BB6QNVCW5Y4UCQ

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு; அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

July 27, 2026

அமெரிக்க தூதரகத்திற்கு அருகே அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை திங்கட்கிழமை அதிகாலை அமெரிக்க தூதரகத்திற்கு

Rev.ASirisumana-263x263

யுத்த காலத்தில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க காவி உடையும் பிக்குகளின் தியாகமும் முக்கிய பங்கு வகித்தது – அகலகட சிறிசுமண தேரர்

July 27, 2026

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட காலத்தில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதில் பௌத்த பிக்குகளும், காவி உடையும்

5

காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி!

July 27, 2026

ஹைதராபாத்: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி

missing per fa

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு: யாழ்ப்பாணத்தில் ஓகஸ்ட் 30இல் நடத்த ஏற்பாடு!

July 27, 2026

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான வரும் ஓகஸ்ட் 30ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் பிரமாண்ட சர்வதேச மாநாடு ஒன்றை

jaffna court

யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் ரகுராம் அவதூறு வழக்கு: “சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்த முடியாது” – எதிர்மனுதாரர்கள் சார்பில் மூத்த சட்டத்தரணி கடும் வாதம்!

July 27, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம் தொடர்ந்த அவதூறு வழக்கில், “குற்றவாளிகளோ அல்லது சந்தேகநபர்களோ சட்டத்தை ஆயுதமாகப்

Screenshot

காங்கேசன்துறை எரிபொருள் களஞ்சியத்திற்கு அருகே திடீர் தீ பரவல் – பெரும் அனர்த்தம் தவிர்ப்பு; பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து மீண்டும் கேள்வி!

July 27, 2026

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) எரிபொருள் களஞ்சிய வளாகத்திற்கு அண்மையில் உள்ள வெற்றுக்காணியில் இன்று திடீரென ஏற்பட்ட தீ பரவல், கடற்படையினரும்