பணம் அச்சிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த கால அரசாங்கங்கள் பணம் அச்சிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தற்போது பணம் அச்சிடப்படவில்லை என்றால் பணவீக்கம் அதிகரிப்பதற்கான காரணத்தைப் பொதுமக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
மேலும், பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதற்காக இலங்கை மத்திய வங்கி சரியான பொருளாதார முன்னறிவிப்புகளை மேற்கொண்டு, உரிய திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.