நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றிருந்ததோடு, மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டிருந்ததோடு, நான்காவது போட்டியை நியூசிலாந்து வென்றிருந்த நிலையில், மெளன்ட் மகட்டரேயில் ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற ஐந்தாவது போட்டியை வென்றதைத் தொடர்ந்தே தொடரை 3-1 என்ற ரீதியில் இந்தியா கைப்பற்றியது.
ஸ்கோர் விவரம்:
நாணயச் சுழற்சி: நியூசிலாந்து
இந்தியா: 209/10 (42.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: அக்ஸர் பட்டேல் 46 (55), இஷன் கிஷன் 46 (58) ஓட்டங்கள். பந்துவீச்சு: மிற்செல் சான்ட்னெர் 3/47, ஜேக்கப் டஃபி 3/60, மத்தியூ பிஷர் 2/28, பிளையர் டிக்னர் 1/24, மிஷெல் பிறேஸ்வெல் 1/35)
நியூசிலாந்து: 187/10 (48.1 ஓவ. ) (துடுப்பாட்டம்: டீன் பொக்ஸ்குறொஃப்ட் 31 (42) ஓட்டங்கள். பந்துவீச்சு: அர்ஷ்டீப் சிங் 3/30, அக்ஸர் பட்டேல் 2/28, மொஹமட் சிராஜ், நாமன் திர் ¼, ஆகிப் நபி 1/37, யஷ் தாக்கூர் 1/38)
போட்டியின் நாயகன்: அர்ஷ்டீப் சிங்
தொடரின் நாயகன்: குர்னூர் பிறார்