10 ஆண்டுகளுக்கு பிறகு ரோபோ உதவியுடன் எழுந்து நடந்த இளம்பெண்!

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜெசிகாவுக்கு 16 வயதாக இருந்தபோது நேரிட்ட ஒரு கொடூர கார் விபத்து, அவரது இடுப்புக்குக் கீழே உள்ளப் பகுதியைச் செயலிழக்கச் செய்தது. ஒரே நாளில் அவரது உலகம் தலைகீழாக மாறியது. சக்கர நாற்காலியே அவரது வாழ்க்கையாக மாறியது. இருப்பினும், தனது ஊனத்தைக் கண்டு முடங்கிவிடாத ஜெசிகா, சமூக ஊடகங்களில் ஒரு Influencer ஆக மாறினார். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவரின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் சவால்கள் குறித்த வீடியோக்களைப் பகிர்ந்து, […]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை இலாபமீட்ட செய்ய 5 ஆண்டு திட்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, அதிகளவிலான விமானப் பயணத் தாமதங்கள், கடன் சுமை மற்றும் புதிய விமானங்களைக் கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள கொள்வனவு நடைமுறைத் தாமதங்கள் தொடர்பில் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறித்த குழு, அதன் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. தற்போது 23 விமானங்களைக் கொண்டுள்ள விமானச் […]

இலங்கையர்களுக்கு விசா கட்டணம் ரத்து

உயர் கல்வி கற்பதற்காக முதன்முறையாக பெலாருஸ்ஸுக்கு வருகை தரும் இலங்கை மாணவர்களிடம் இருந்து அறவிடப்படும் நுழைவுக் விசா கட்டணத்தை ரத்து செய்ய பெலாருஸ் அரசு தீர்மானித்துள்ளது. கடந்த மே மாதத்தில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், அந்நாட்டுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் விளைவாகவே இது இடம்பெற்றுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், பெலாருஸில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டுக்கு வருவதற்கு விசா பெறும் முறையை எளிதாக்குவதற்கான அவசியமான […]

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல்

வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் இலங்கைக்குக் கிழக்காக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் மட்டக்களப்புக்குக் கிழக்காக ஏறத்தாழ 650 கி.மீ தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இத் தொகுதி வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை விட்டு விலகி இன்று ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அதன் பின் அத் தொகுதி நவம்பர் 16 ஆம் திகதியளவில் மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு புயலாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே, கடலில் பயணம் […]

பாடசாலைகளில் மாணவர் சேர்க்கை 40,000ஆல் குறைவு

ஆண்டுதோறும் முதலாம் தரத்திற்கு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை சுமார் 40,000 பேரால் குறைந்து வருவதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுவாக, ஆண்டுதோறும் சுமார் 3 இலட்சம் குழந்தைகள் பாடசாலைகளில் சேர்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புதிதாக 309 ஆரம்பப் பாடசாலைகள் அமைக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். […]

5 மாதங்களுக்கு முன் காணாமல்போன சிறுமி 2 மாதக் குழந்தையுடன் மீட்பு

ஐந்து மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன சிறுமி ஒருவர் இரண்டு மாத கைக்குழந்தை ஒன்றுடன் அடர்ந்த வனப்பகுதியில் குகை ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நக்கிள்ஸ் மலைத்தொடரின் மேற்குச் சரிவுக்கு அருகில் அமைந்துள்ள உடுதும்புரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீமுரே, கந்தகெட்டிய பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமி ஒருவர் சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு காணாமல் போயிருந்தார். அவரது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து சிறுமியை தேடிய போதிலும் அவரை கண்டறியமுடியவில்லை. இது தொடர்பில் […]

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்

வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தி தமிழ் அரசியல் பரப்பிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் இறுதிவரை உரத்துக் குரல் கொடுத்த அரசியல் ஆளுமைகளில் ஒருவராக அவர் திகழ்ந்தார். தனது அரசியல் பயணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொண்ட அவர், தனது கொள்கைகளில் உறுதியாக இருந்து தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் தொடர்ந்து குரல் கொடுத்து […]