ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக காலம் விளையாடிய இந்தியாவின் சச்சின் டென்டுல்கரின் சாதனையை சிம்பாப்வேயின் பிரெண்டன் டெய்லர் முறியடித்துள்ளார்.
சிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கெதிரான முதலாவது போட்டியில் களமிறங்கியபோதே சச்சினின் சாதனையை டெய்லர் முறியடித்திருந்தார்.
2004ஆம் ஆண்டு அறிமுகத்தை மேற்கொண்ட டெய்லர் தற்போது 22 ஆண்டுகள் நான்கு மாதங்கள் விளையாடியுள்ளார். 2012ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின், 22 ஆண்டுகள் 3 மாதங்கள் விளையாடியிருந்தார்.
இதில் டெய்லர் 2021ஆம் ஆண்டு ஓய்வு பெற்று, சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடி, ஊக்கமருந்துக்கெதிரான கோவையை மீறியதற்காக மூன்றரையாண்டுகள் தடை செய்யப்பட்டு கடந்தாண்டு ஓய்விலிருந்து மீள வந்திருந்தார்.