ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீதான குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்கில், சம்பவம் தொடர்பான 20 நிமிட வீடியோ அடங்கிய பென்டிரைவை காவல்துறையிடம் ஒப்படைத்தது குறித்து புகார்தாரரும் ஐ.சி.டபிள்யூ தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதியுமான ஹரிஹரன் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் எனவும், பணமும் அதிகாரமும் உள்ளவர்களுக்கு இந்த வழக்கில் வழங்கப்படும் தண்டனை ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொழிலதிபர் ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக பரபரப்பு பேட்டியளித்துள்ள புகார்தாரர் ஹரிஹரன், சம்பவம் குறித்த 20 நிமிட வீடியோ அடங்கிய பென்டிரைவை ஒருவர் தன்னிடம் கொடுத்ததாகவும், அதனைத் தான் காவல்துறையிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இருமுறை போலீஸ் விசாரணைக்கு ஆஜரான போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இதுவரையில் தன்னை யாரும் அச்சுறுத்தவோ அல்லது மிரட்டவோ இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.