ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் பாராட்டு

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் விபத்துக்குள்ளான இரண்டு ஈரான் கப்பல்களில் இருந்தவர்களுக்கு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை அரசு முன்வந்தமை பாராட்டுக்குரியது என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசு நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள இக்கட்டான காலப்பகுதியில், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பது கடினமானது என்ற போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் புத்திசாலித்தனமாக சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால் இலங்கை மறைமுகமாக அதன் ஒரு பங்காளியாக வேண்டிய நிலை குறித்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே தற்போது நிலவும் போர்ச் சூழல், இலங்கை போன்ற கிழக்கு நாடுகளுக்கும் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. கடந்த சில நாள்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்காவின் தாக்குதலால் ஈரான் போர்க்கப்பல் ஒன்று அழிவடைந்தது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டிய கட்டாய சூழலுக்கு இலங்கை அரசு தள்ளப்பட்டது.

அந்தச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அரசு எடுத்த தீர்மானத்தை நாம் பாராட்ட வேண்டும். சர்வதேச ஒப்பந்தங்களுக்கு மதிப்பளிக்கும் நாடாக அந்த முடிவை அரசு எடுத்துள்ளது. மற்றொரு ஈரான் கப்பல் இலங்கைக் கடற்பரப்புக்கு வந்து உதவி கோரியிருந்த நிலையில், ஜனாதிபதி மிகவும் நிதானமாகச் செயற்பட்டு அதில் தலையிட்டுள்ளார். சர்வதேச விதிகளை மீறாமலும், போரில் ஈடுபட்டுள்ள வல்லரசு நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் அவர் மிகவும் நடுநிலையான முடிவை எடுத்துள்ளார்.

அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டு செல்லவும், ஈரான் கடற்படையினரைப் பாதுகாப்பாக நாட்டுக்குள் அழைத்து வந்து மனிதாபிமான உதவிகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது உண்மையிலேயே கடினமான, ஆனால் வரவேற்கத்தக்க ஒரு முடிவாகும். வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போரின் போது இலங்கை போன்ற நாடுகள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். ஒரு நாட்டுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ முடிவெடுத்தால் நாடு என்ற ரீதியில் நாம் தேவையற்ற விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.

நாங்கள் முப்பது கால போரால் பாதிக்கப்பட்ட ஒரு தேசம். போரின் விளைவுகளை நாங்கள் நன்கு அறிவோம். மனித குலத்தின் ஒற்றுமையையும் மனிதாபிமானத்தின் தேவையையுமே எமது சாஸ்தாவான புத்த பெருமான் உலகுக்குப் போதித்தார். அதனைப் புரிந்து கொண்டு உலக வல்லரசுகள் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ‘வைரத்தினால் வைரத்தை தணிக்க முடியாது’ என்ற உன்னதமான பௌத்த போதனையைப் பின்பற்றி உலக வல்லரசுகள் உலக அமைதிக்காகப் பாடுபடுவதையே நாம் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

H3HUDEJSPZFWTB5LZLQXVFZQUQ

ஊடகவியலாளர் இராப்போசன விருந்தில் கனடியப் பிரதமர் மார்க் கார்னியுடன் இணைந்த ‘போலி ட்ரம்ப்’: நகைச்சுவையால் களைகட்டிய ஒட்டாவா

November 23, 2026

கனடாவின் ஒட்டாவா நகரில் சனிக்கிழமை (நவம்பர் 21) இரவு நடைபெற்ற வருடாந்த பாராளுமன்ற ஊடகவியலாளர் இராப்போசன விருந்தில் (Parliamentary Press

7

“சண்டியர் படத் தலைப்பை மாற்றக் கோரி டிசம்பர் 7-ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்!” – கிருஷ்ணசாமி அறிவிப்பு!

November 23, 2026

சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள ‘சண்டியர்’ படத் தலைப்பை மாற்றக் கோரி வரும் டிசம்பர் 7-ஆம் தேதி சென்னையில்

6

“முதல்வர் விஜய் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் கூட்டம்!” – எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு!

November 23, 2026

சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்

5

“கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்தில் உண்மை இருந்தால் நடவடிக்கை!” – அமைச்சர் அருண்ராஜ் உறுதி!

November 23, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவம்

3

“ஒரு ஜோசியர்தான் தவெக அரசின் கொள்கைத் தலைவர்!” – மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

November 23, 2026

சென்னை: தவெக ஆட்சிக்கு ஒரு ஜோசியர்தான் கொள்கைத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறார் என்றும், 6 மாத ஆட்சியில் எல்லாமே நாசமாகிவிட்டதாகவும்

court-judge-hammer-gavel-696x398

ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்து யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட வாக்குமூலம்

November 23, 2026

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவினால் (CIABOC) தமக்கெதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தாம்

2

“தமிழ்நாட்டில் நடப்பது மதச்சார்பற்ற அரசுதான்!” – அமைச்சர் வன்னி அரசு பேட்டி!

November 23, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடப்பது மதச்சார்பற்ற அரசாங்கம்தான் என்பதற்குத் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் செயல்பாடே சிறந்த சாட்சி என்று அமைச்சர்

1

“ஜோசியம், ஜாதகம், யாகம் என ஆட்சி நடக்கிறது!” – தவெக ஆட்சி குறித்து உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!

November 23, 2026

சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் முறையாக வாதாடத் தவறியதுடன், 2 நாட்களாகியும் முதலமைச்சர் விஜய் பதில் சொல்லவில்லை என

Sajith-Premadasa-4

இலங்கையின் வெளியுறவுக் கொள்கை- அனைத்து நாடுகளுடனும் ‘நேர்மறையான கூட்டிணைவுகளை’ ஏற்படுத்த சஜித் அழைப்பு!

November 23, 2026

இலங்கையின் பாரம்பரிய அணிசேரா கொள்கைக்கு அப்பால் சென்று, நாட்டின் தேசிய நலன்களை முன்னேற்றும் வகையில் சர்வதேசப் பங்காளித்துவங்களைக் கட்டியெழுப்ப, அனைத்து

namal raja

வாக்குறுதியளிக்கப்பட்ட 4 பில்லியன் டொலர் சீன முதலீடு எங்கே? அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!

November 23, 2026

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் சீன முதலீட்டின் தற்போதைய

gold

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

November 23, 2026

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, கடந்த 21ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 22

902143220_122227379858360374_6202966544825060215_n

Behind Me Media தலைமை அலுவலகத்தில் மாவீரர் நினைவேந்தல் வாரம் 2026

November 23, 2026

2026 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி ஆரம்பமாகி நவம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மாவீரர்