மக்களின் பல விடயங்களைப் பாதிக்கும் மதுபானசாலைகளுக்கு எதிராகப் போராட்டம்

குடும்பங்களின் அமைதி பொருளாதாரம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு கோரி சர்வதேச மகளிர் தினமான இன்று(8) போராட்டம் இடம்பெற்றது. குறித்த போராட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன அக்கரகந்த தோட்டத்திற்கு செல்லும் சந்தியில் இன்று காலை நடைபெற்றது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மதுபானசாலைகள் எமது அடையாளம் அல்ல எமது உழைப்பின் பாதியை சுரண்டும் மதுபானசாலை வேண்டாம் மதுவற்ற சமூகத்தை உருவாக்குவோம் போன்ற வசகங்கள் எழுதிய சுலோக […]
வீடொன்றில் சூட்சுமமாக பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த பெண் கைது

வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி பெட்ரோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர். வீடொன்றில் பெட்ரோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இன்று(8.3.2026)கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதன் போது குறித்த வீட்டின் கட்டிலின் கீழ் சூட்சுமமாக போத்தல் மற்றும் கலன்களில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் சுமார் 32 லீட்டர் பெட்ரோல் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் 39 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேக நபர் கைதான நிலையில் பொலிஸ் பிணையில் […]
வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுவதால் கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

மட்டக்களப்பில் டீசலில் ஓடும் வாகனங்கள் மண்ணெண்ணெய்யில் ஓடுகின்றதனால் கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவுறுத்தலையும் மீறி சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் வாகனங்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கி வருகின்ற இந்த சட்டவிரோத செயற்பாட்டை கண்டறிந்து அதற்கான சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு அரசாங்க அதிபரிடம் ஈ.பி.டி.பி கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அவரது காரியாலயத்தில் நேற்று (07.3.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு […]
வவுனியாவில் வாள்வெட்டு; இருவர் காயம்

வவுனியா பூந்தோட்டம் சந்தியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(7.3.2026) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,நேற்று (07.03) காலை குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருவரை வான் ஒன்றில் வந்த நபர்கள் வழிமறித்து வாளால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளை வீதியில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதேவேளை குறித்த நபர்களை வாகனத்தில் வந்தவர்கள் கடத்திச்செல்ல முயன்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் […]
இலங்கையில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத கால இலவச விசா

இலங்கைக் கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளுக்கு ஒரு மாத காலத்திற்குச் செல்லுபடியாகும் இலவச விசாக்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஈரானியக் கப்பல்களில் இருந்து மீட்கப்பட்ட மாலுமிகள், மனிதாபிமானப் பாதுகாப்பின் கீழ் இலங்கையில் தங்கியிருக்க அனுமதிக்கும் வகையில் இந்த ஒரு மாத கால இலவச விசா வழங்கப்படுவதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் இவ்வாறான சூழல்கள் ஏற்படும் போது இது போன்ற முடிவுகள் எடுக்கப்படலாம் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இத்தகைய நடவடிக்கைகள் எந்தவொரு குறிப்பிட்ட […]
தமிழ்ச் சங்கத்தின் “சர்வதேச மகளிர் தினம்”

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் “சர்வதேச மகளிர் தினம்” 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை நிகழ்வாக சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேரவை உறுப்பினர் எழுத்தாளர் வசந்தி தயாபரன் தலைமையில் பத்மா சோம காந்தன் அரங்காக நடைபெற்றது. மனோன்மனி சண்முகதாஸ் தம்பதியினரின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து செல்விகள் பார்கவி கஜமுகன், சமேஷா ரஜீவ் தமிழ் வாழ்த்து இசைத்திருந்தார். சமூக செயற்பாட்டாளர் பூங்கோதை தங்கமயில், கவிஞர் லுணுகலை ஸ்ரீ, மற்றும் “பாத்துமுத்து ஹலால்தீன்” பற்றி எழுத்தாளர் ரக்ஷானா ஷரிபுத்தீன் அத்துடன் […]
தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம்

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (08.03.2026) கணிசமான உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில், ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5172 டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை இன்றையதினம் 84.54 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் காரணமாக தங்கத்தின் விலையில் தளம்பல் நிலை பதிவாகி வருகிறது. இதேவேளை உள்நாட்டு சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை […]
ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் பாராட்டு

இலங்கை கடற்பரப்புக்கு அருகில் விபத்துக்குள்ளான இரண்டு ஈரான் கப்பல்களில் இருந்தவர்களுக்கு, சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைய மனிதாபிமான உதவிகளை வழங்க இலங்கை அரசு முன்வந்தமை பாராட்டுக்குரியது என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். உலக வல்லரசு நாடுகள் போரில் ஈடுபட்டுள்ள இக்கட்டான காலப்பகுதியில், இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுப்பது கடினமானது என்ற போதிலும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிகவும் புத்திசாலித்தனமாக சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்துள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். […]
திருமலையில் வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை – உவர்மலை, லோவர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையிலிருந்து இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றைய தினம் (07.03.2026) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டின் உரிமையாளரால் வீட்டு கூரைக்கு மேல் கை குண்டுகள் இருப்பதாக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகளை மீட்டுள்ளனர். இந்த வீட்டின் உரிமையாளர் 1993ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் வசித்து வருகிறார் எனவும் 27.02.2026 […]
பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் பல இலட்சம் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் அழிப்பு

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை க்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக நிலையம் ஒன்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகரசபை சுகாதார பரிசோதகர் இணைந்து ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். இதன்போது காலாவதியான உணவு பொருட்களை காட்சிப்படுத்தியமை,அழுகிய மரக்கறி பழங்கள் காட்சி படுத்தியிருந்தமை,உணவு பொருட்களை உரிய வகையில் களஞ்சியப்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பிரபல வர்த்தக […]